ஒரு மணி நேரம் அன்பால் ஒருவர் உங்களை அரவணைக்க கட்டி பிடிக்க ரெடி. அதற்கு கட்டணமாக 7000 கேட்டால் எப்படி இருக்கும்?
வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் குறித்த அருமை, பெருமைகளை எல்லாம் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பார். அந்த கட்டிப்பிடி வைத்தியத்தையே நபர் ஒருவர் தொழிலாக மாற்றியுள்ளார்.
கட்டிப்பிடிப்பது ஒரு தொழிலா? கட்டிப்பிடிக்க கட்டணமா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஐரோப்பாவில் தான் இது நடைமுறையில் உள்ளது. ட்ரெவர் ஹூட்டன், ட்ரெஷர் என்ற பெயரில், அவர்களின் வணிகமான இம்ப்ரஸ் கனெக்ஷன் மூலம் "கடில் தெரபி"(cuddle therapy) வழங்கி வருகிறார்.
ஐக்கிய ராஜ்யம் (UK), பிரிஸ்டலில் வசிக்கும் ட்ரெஷர், மக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர உதவும் ஒரு மணிநேரக் கட்டிப்பிடிப்பு தெரபிக்கு £75 (Rs7,000) வசூலிக்கிறார்.
கொரோனா காலக்கட்டத்தில் பணி நீக்கம் செய்யும் நிறுவனங்கள் மத்தியில் இப்படியொரு நிறுவனமா? ஆனந்தத்தில் ஊழியர்கள்
இது குறித்து அவர் கூறுகையில், தொடுதல் மூலம் ஒருவருக்கு அக்கறை, பாசம் மற்றும் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவது என்பது வெறும் அரவணைப்பை விட மேலானது என்று அவர் விளக்கினார். சிலர் அதை பாலியல் வேலை என்று தவறாக நினைக்கிறார்கள்.
மனித தொடர்புகளை உருவாக்குவதற்கான எனது ஆர்வத்தின் அடிப்படையில் நான் ஒரு வணிகத்தை உருவாக்கினேன். பலர் அதை உருவாக்க போராடுகிறார்கள், அங்குதான் நான் அடியெடுத்து வைக்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு மனித தொடர்புகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் பார்க்கத் தொடங்கியது மற்றும் மே 2022 இல் அதை ஒரு வணிகமாக மாற்றியுள்ளது.
இன்றைய கால ஓட்டத்தில் மக்கள் அரவணைப்பிற்காக ஏங்குகிறார்கள். அதை கொடுக்கவே முயல்கிறேன். ஒரு அந்நியரைக் கட்டிப்பிடிப்பதை சிலர் முதலில் கொஞ்சம் சங்கடமாக உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் விரைவில் அதில் பழகிவிடுகிறார்கள்.
அரவணைப்பு சிகிச்சையை பாலினமற்ற, பிளாட்டோனிக் நெருக்கம் கொண்டது. இங்கு வரும் நபர்களின் தேவை, வசதி, விருப்பதைத் தெரிந்து கொள்ள முயல்வோம். பின் அவர்களுக்கு அன்பையும் அரவணைப்பையும் கொடுப்போம். அவர்களின் எல்லைகள், அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பார்க்க நிறைய சோதனைகள் உள்ளன - அவை மக்களை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் உணர உதவுகின்றன.
மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்பின்மை அல்லது சங்கடங்களுடன் வருகிறார்கள். ஆனால் அவர்கள் சௌகரியமாக உணர்வதைக் கண்டுபிடிக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். மேலும், அந்த நபர் ஏதோ ஒரு பாலுறவின் தொடக்கத்தை உணர ஆரம்பித்தால், அதைப் பற்றி நாம் விளக்கி சரி செய்வோம். ஏனென்றால் இது பாலுறவு அல்லாத நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.
இது அரவணைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பது பற்றியது. நான் ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது, அந்த தொடுதலின் மூலம் நான் கவனிப்பு, பாசம் மற்றும் நல்லெண்ணத்தை ஊற்றுகிறேன். வணிக ரீதியான கட்லராக இருந்தாலும் உங்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்து உங்களுக்கு அரவணைப்பை வாங்க முயல்கிறேன்’ என்றார் .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.