ஜேசிபி வண்டியின் முன்பகுதியைக் கொண்டு தரையில் நின்றவரை தாக்கிய ஓட்டுநர் - பதறவைக்கும் வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் ஜே.சி.பி வண்டி ஓட்டுநர், வண்டியின் மண் அள்ளும் பகுதியைக் கொண்டு ஒருவரைக் காயப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேசிபி வண்டியின் முன்பகுதியைக் கொண்டு தரையில் நின்றவரை தாக்கிய ஓட்டுநர் - பதறவைக்கும் வீடியோ
ஜே.சி.பியால் தாக்கப்படும் நபர்
  • Share this:
இணையத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் ஜே.சி.பி இயந்திரத்தை ஓட்டுபவர், அந்த வண்டியின் மண் அள்ளும் பகுதியைக் கொண்டு தரையில் நிற்பவரைத் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலம் முழுகு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘ஜே.சி.பி இயந்திரத்தை இயக்குபவருக்கும், தரையில் நின்று கொண்டிருந்தவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தரையில் நின்று கொண்டிருந்தவர் மது குடித்திருந்தார். அதனால், ஜே.சி.பி. ஓட்டுநர் இயந்திரத்தின் மண் அள்ளும் பகுதியைக் கொண்டு தாக்கியுள்ளார். வண்டி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று விளக்கமளித்துள்ளார்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading