தனுஷ் பட வசனத்திற்கு டிக்டாக் வெளியிட்ட நடிகை பிரியா வாரியர்... 2 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியது!

பிரியா வாரியர்

இன்ஸ்டாகிராமிலிருந்து விலகினாலும் டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகிறார் நடிகை பிரியா வாரியர்.

 • Share this:
  நடிகை பிரியா வாரியர் டிக்டாக்கில் தனுஷ் பட வசனத்தை பேசி உள்ள வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

  ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் நடித்து பிரபலமானவர் பிரியா வாரியர். அந்தப் பாடலில் அவரது கண் சிமிட்டல் பலரையும் ஈர்த்தது. அதன் மூலம் சமூகவலைதளங்களில் ஒரே நாளில் அவருக்கு ஏராளமான கிடைத்தனர்.

  பிரியா வாரியருக்கு இன்ஸ்டாகிராமில் 70 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலேவார்ஸ் இருந்தனர். ஆனால் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அவர் விலகி விட்டார். இன்ஸ்டாகிராமிலிருந்து விலகினாலும் டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

  டிக்டாக்கிலும் பிரியா வாரியருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிரியா வாரியர் நடிகர் தனுஷின் மாரி-2 பட வசனத்திற்கு டிக்டாக் செய்துள்ளது 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அந்த படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவி பேசும் கலகலப்பான வசனத்தை பேசி அனைவரது லைக்ஸ்களையும் அள்ளி உள்ளார்.
  @priya.p.varrierRowdy baby😎♬ original sound - sathyas9


  @priya.p.varrierKannadi koodum kooti💛♬ Kannadi Koodum Kootti - Recreated Version - Sanah Moidutty


  @priya.p.varrierSoooo stupiddd🤣♬ Why did this blow up tag me if you use it - shazia_jagot399  மலையாள இயக்குநர் பிரசாந்த் மாம்பூலி இயக்கத்தில் பிரியா வாரியர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் கதை மற்றும் தலைப்பை மாற்றக்கோரி போனி கபூர் வழக்கு தொடர்ந்திருப்பதால், நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருக்கிறது.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published: