• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தனியாக மார்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பிரதமர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தனியாக மார்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பிரதமர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தனியாக மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பிரதமர்

தனியாக மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த பிரதமர்

சாதாரண குடிமகன் போல எளிமையாக தான் பிரதமர் என்று எவ்வித கர்வம் ஏதும் இல்லாது தனி ஆளாக நடந்து சூப்பர் மார்க்கெட் சென்று காய்கறிகளை வாங்கி விட்டு வெளியில் வருகின்றார். இதனை கண்ட கணேஷ் பிரதமரிடம் பேசி சிறு பேட்டி ஒன்றை எடுத்துள்ளார்.

  • Share this:
    நெதர்லாந்து பிரதமர் தனியாக மார்கெட்டிற்கு வந்து காய்கறி வாங்கிச் சென்ற வீடியோவை தமிழர் ஒருவர் பார்த்து ஆச்சர்யத்தில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    நெதர்லாந்து நாட்டில் வசிப்பவர் கணேஷ். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் நெதர்லாந்தில் உணவு விடுத்தது ஒன்றை நடத்தி வாழ்ந்து வருகின்றார். மேலும் யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். தினமும் அவர் சந்திக்கும் நிகழ்வுகள் , அன்றாடம் செய்யும் செயல்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

    இந்நிலையில் தற்போது அவர் எதிர்பாராதவிதமாக சூப்பர் மார்க்கெட் சென்ற போது அங்கு அந்நாட்டு பிரதமர் ருட்டேவை பார்த்து என்ன சூப்பர் மார்க்கெட்டில் பிரதமரா? என ஆச்சர்யத்தில் ஆழ்ந்து அத்தனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    அந்த வீடியோவில், பிரதமர் ருட்டே சாதாரண குடிமகன் போல எளிமையாக தான் பிரதமர் என்று எவ்வித கர்வம் ஏதும் இல்லாது தனி ஆளாக நடந்து சூப்பர் மார்க்கெட் சென்று காய்கறிகளை வாங்கி விட்டு வெளியில் வருகின்றார்.இதனை கண்ட கணேஷ் பிரதமரிடம் பேசி சிறு பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். எவ்வித தயக்கமும் இல்லாமல் புன்னகையோடு கணேஷ் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த பிரதமர் அவரை கட்டி பிடித்து அங்கிருந்து நடந்து சென்றார்.பிரதமரின் எளிமையான செயலை கண்ட கணேஷ் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

     



     

    பாதுகாப்புக்கு ஒருவர் கூட இல்லாமல் எளிமையாக சூப்பர் மார்கெட்டில் பொருட்களை வாங்கி அதைத் தானே சுமந்து வரும் ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே அவர்கள் என தலைப்போடு இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

    Prime Minister of the Netherlands Mark Rutte

    முன்னதாக நெதர்லாந்து சென்றிருந்த‌ பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் சைக்கிள் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். பிரதமர் மோடி அந்த சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலதளங்களில் வைரலாகி வந்தது. கடந்த 2017ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: