முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ''30 வயது வரை வேண்டாம்.. சிறுமிக்கு டேட்டிங் அட்வைஸ் செய்த அமெரிக்க அதிபர்'' - வைரல் வீடியோ!

''30 வயது வரை வேண்டாம்.. சிறுமிக்கு டேட்டிங் அட்வைஸ் செய்த அமெரிக்க அதிபர்'' - வைரல் வீடியோ!

அதிபர் ஜோ பைடன்

அதிபர் ஜோ பைடன்

அதிபர் ஜோ பைடன் சிறுமியிடம் 30 வயது வரும் வரை உண்மையான உறவில் ஆண்கள் வேண்டாம் என்று கூறிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaAmericaAmerica

இர்வின் வேலே கம்முநிட்டி கல்லூரியில் நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் கலந்துகொண்டுள்ளார். நிகழ்ச்சியின் முடிவில் அதிபருடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதில் சிறுமி ஒருவர் அதிபருடன் புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது அதிபர் ஜோ பைடன் சிறுமியின் தோளில் கைபோட்டு, சிறுமிக்கு வாழ்க்கையின் டேட்டிங் ஆலோசனை கொடுத்துள்ளார். சிறுமியிடம், நான் என்னுடைய மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு முக்கியமாகச் சொன்னது என்று தொடங்கி 30 வயது வரும் வரை உண்மையான உறவில் ஆண்கள் வேண்டாம் என்று சிறுமியிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுமி, நான் இதை நினைவில் வைத்துக் கொள்கிறேன் என்று கூறி தயக்கத்துடன் சிரித்துள்ளார்.

இதனை அருகிலிருந்த பத்திரிக்கையாளர் வீடியோவாக பதிவு செய்து அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. 5.2 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து சென்றுக் கொண்டியிருக்கிறது.

இதற்குப் பல தரப்பட்ட கருத்துகள் குவிந்தபடி இருக்கிறது. பதிவிட்ட பத்திரிக்கையாளர் அதிபர் கூறியது அந்த சிறுமியைச் சங்கடத்திற்கு உள்ளாகியது என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read : ஸ்கூல் வேனில் 15 அடி நீள மலைப் பாம்பு! வனத்துறையை அலறவைத்த பகீர் சம்பவம்!

ஆனால் அதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் சிலர் ஆதரவு தெரிவித்தும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Joe biden, Viral Video