முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தண்ணீருக்கு அடுத்தபடியாக மணல் வளத்தை பாதுகாப்பது ஏன் முக்கியம்.?

தண்ணீருக்கு அடுத்தபடியாக மணல் வளத்தை பாதுகாப்பது ஏன் முக்கியம்.?

Sand (Credits: AFP)

Sand (Credits: AFP)

Preserving Sand | உலகளவில் ஆண்டுதோறும் எடுக்கப்படும் இந்த அளவு மணல் நமது பூமியை சுற்றி 27 மீட்டர் அகலமும் 27 மீட்டர் உயரமும் கொண்ட சுவரைக் கட்ட போதுமானதாக இருக்கும் என ஐ.நா-வின் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை மதிப்பிட்டு உள்ளது. மேலும் தண்ணீரைப் போல மணலும் எல்லையற்ற புதுப்பிக்கத்தக்க வளம் அல்ல என்பதை பலரும் நினைவில் கொள்வதில்லை. மணலை எடுப்பது என்பது லாபகரமான தொழிலாக இருப்பதால் சட்டவிரோதமாக மணல் சுரண்ட சமூக விரோதிகளை தூண்டுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ நீர் மிகவும் இன்றியமையாதது. இதை நாம் அறிந்திருப்பதால் தண்ணீர் என்ற இயற்கை வளத்தின் அற்புத நன்மைகள் மற்றும் அதனை சேமிப்பதன் முக்கியத்துவத்தை பொதுவாக நாம் அறிந்திருக்கிறோம்.

ஆனால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளமாக மணல் இருக்கிறது. உலகம் முழுவதுமே கட்டுமான துறை பெருமளவு வளர்ச்சி பெற்றிருப்பதால் மணலுக்கு மிக மிக அதிக தேவை உள்ளது. இந்தியாவில் மட்டுமே ஆண்டுதோறும் சராசரியாக 1.2 பில்லியன் டன் மணல் தேவைப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 பில்லியன் டன்னுக்கும் மேல் மணல் பயன்படுத்தப்படுகிறது. உலகில் அதிகம் சுரண்டப்படும் இயற்கை வளங்களில் மணல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகளவில் ஆண்டுதோறும் எடுக்கப்படும் இந்த அளவு மணல் நமது பூமியை சுற்றி 27 மீட்டர் அகலமும் 27 மீட்டர் உயரமும் கொண்ட சுவரைக் கட்ட போதுமானதாக இருக்கும் என ஐ.நா-வின் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை மதிப்பிட்டு உள்ளது. மேலும் தண்ணீரைப் போல மணலும் எல்லையற்ற புதுப்பிக்கத்தக்க வளம் அல்ல என்பதை பலரும் நினைவில் கொள்வதில்லை. மணலை எடுப்பது என்பது லாபகரமான தொழிலாக இருப்பதால் சட்டவிரோதமாக மணல் சுரண்ட சமூக விரோதிகளை தூண்டுகிறது. பொதுவாக மணலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்கள் குறைவாகவே அறிந்திருக்கிறார்கள், மேலும் பருவநிலை மாற்றத்தை தாங்க நமது பூமிக்கு மணல் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

ஏன் மணலை பாதுகாக்க வேண்டும்.?

கட்டுமானம் மற்றும் தொடர்புடைய தொழில்களில் முக்கிய ஒரு மூலப்பொருளாக மணல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாலைவன மணல் மெல்லியதாக இருப்பதால் இவற்றை யாரும் சுரண்டுவதில்லை. முக்கியமாக கடற்கரைகள் , கடலோரப் பகுதிகளில் ஆறுகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் மணல் தான் இலக்காகின்றன.

Also Read : இறுதிச் சடங்கு செய்யும்போது சவப்பெட்டியிலிருந்து எழுந்த பெண்: உறவினர்கள் ஷாக்- அடுத்து நடந்தது.?

உலகின் முக்கிய நதிகளில் பெரும்பாலானவை அவற்றின் இயற்கை மணலில் பாதி முதல் 95% வரை இழந்துவிட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அதே போல மண் அரிப்பை கட்டுப்படுத்தி, ஒரு அத்தியாவசிய புவியியல் பாத்திரத்தை வகிக்கிறது கடல் மணல். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மற்றும் புயல் எழுச்சி, கடல் மட்ட உயர்வு போன்றவற்றால் ஏற்படும் தாக்கங்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுவதில் கடற்கரைகளில் இருக்கும் மணலை மிகவும் செலவு குறைந்த உத்தியாக கூட இருக்கலாம் என்று ஒரு ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அதிகப்படியான மணல் நுகர்வு ஆற்றின் படுகை மற்றும் ஆற்றின் போக்கை மாற்றி கரைகளை அரித்து வெள்ளத்திற்கு வழிவகுக்கும். இது நிலத்தடி நீர் பாதிப்பை தவிர நீர்வாழ் விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளின் வாழ்விடத்தையும் அழிக்கிறது. எனவே தண்ணீரை போலவே மணலும் பாதுகாக்க பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.

Also Read : ஒரு மணி நேர கரண்ட் கட் ஆனா தவிக்கிறோமே... மின்சார வசதியின்றி மக்கள் வாழும் நாடு பற்றி தெரியுமா.?

சர்குலர் எகனாமி:

மணலை நியாயமான முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்ய சில அதிகாரப்பூர்வ விதிமுறைகள் உள்ளன. ஆனால் மொராக்கோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மணல் சுரண்டல் மிக அதிகமாக நடக்கிறது. இது ஒரு உண்மையிலேயே சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனையாகும். மணல் சட்டவிரோதமாக கடத்தப்படும் நிகழ்வுகள் அதிகரித்து கொண்டே வருகின்றன.

Also Read : அழிவின் அபாயத்தில் ஆமைகள், ராஜநாகம் உட்பட ஐந்தில் ஒரு பங்கு ஊர்வன உயிரினங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

"மணல் மாஃபியாக்களை" எதிர்த்துப் போராட, கடலோர நிலப்பரப்புகளின் சுற்று சூழலைப் பாதுகாக்க ஐநா பல தீர்வுகளை முன்வைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, மணலின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த சர்வதேச தரத்தை அமைத்தல், மண் வளத்தை மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் அல்லது மணல் எடுப்பதைத் தடை செய்வதன் மூலம் "மணலுக்கான வட்ட பொருளாதாரத்தை (சர்குலர் எகனாமி)" உருவாக்குதல். கனிம கழிவுகளை நிலத்தில் நிரப்புதல் உள்ளிட்டவை ஆகும்.

First published:

Tags: Sand mafia, Save Soil