ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ட்விட்டரில் திடீர் பணி நீக்கம்; கடைசி நாள் இரவு அனுபவத்தை பகிர்ந்த கர்ப்பிணி பெண்

ட்விட்டரில் திடீர் பணி நீக்கம்; கடைசி நாள் இரவு அனுபவத்தை பகிர்ந்த கர்ப்பிணி பெண்

கடைசி நாள் இரவு அனுபவத்தை பகிர்ந்த கர்ப்பிணி பெண்

கடைசி நாள் இரவு அனுபவத்தை பகிர்ந்த கர்ப்பிணி பெண்

Twitter | பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் பலரும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி, அதன் புதிய முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள எலான் மஸ்க், பெரும்பாலான பணியாளர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து வருகிறார். கடந்த வாரம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதன்மை செயல் அதிகாரியான பரக் அகர்வால் தொடங்கி பல மூத்த நிர்வாகிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க். இதைத் தொடர்ந்து, கீழ்மட்ட அளவிலும் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

  பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் பலரும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இவர்களில் ரச்சல் போண் என்ற 8 மாத கர்ப்பிணி பெண்ணும் அடக்கம். இவருக்கு ஏற்கனவே 9 மாத குழந்தையும் உள்ளது. குழந்தையை மடியில் தூக்கியபடி இருக்கும் ஃபோட்டோவுடன், தன்னுடைய பணிநீக்க நடவடிக்கை எப்படி அமைந்தது என்ற அனுபவத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்தப் பெண்.

  அதாவது, ரச்சலை பணிநீக்கம் செய்வது குறித்த அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை இமெயில் மூலமாக அனுப்பியுள்ளது ட்விட்டர் நிறுவனம். இதில், அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், அதற்கு முந்தைய நாள் (வியாழக்கிழமை) இரவே இவரது அலுவலக லேப்டாப் லாக் செய்யப்பட்டு விட்டதாம்!

  இதுகுறித்து ரச்சல் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வியாழக்கிழமை அலுவலகத்தில் பணியாற்றினேன். ட்விட்டரில் அதுவே கடைசி தினமாக அமைந்துவிட்டது. 8 மாத கர்ப்பிணியாக உள்ளேன். மேலும் 9 மாத குழந்தையும் உள்ளது. குறிப்பாக, அலுவலக லேப்டாப் பயன்படுத்த விடாமல் முடக்கப்பட்டேன். #LoveWhereYouWorked’’ என்று கூறியுள்ளார். ட்விட்டரின் சான் ஃபிரான்சிஸ்கோ கிளையில், கன்டெண்ட் மார்கெட்டிங் மேனேஜராக ரச்சல் பணியாற்றி வந்தவர்.

  Also Read : ஏமாற்றிய கணவரின் முகத்தைக் கன்னத்தில் பச்சைக்குத்திய மனைவி

  இவரது பணிநீக்கம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். குர்த் வாக்னர் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “டிவிட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்ப்பட்ட சிலர் கர்ப்பிணி பெண்கள் என தெரிய வருகிறது. இன்சூரன்ஸ் கவரேஜ் என்ன ஆனது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. உங்கள் வேலையை இழப்பதால் அசாதாரணமான சூழல் மிக அதிகமாக நிலவுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  இந்தியாவிலும் பணிநீக்கம்

  இதற்கிடையே, இந்தியாவிலும் டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பெருமளவில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிவிப்பை அந்நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. குறிப்பாக பொறியாளர்கள், ஒட்டுமொத்த மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்புத்துறை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்ற புள்ளிவிவரம் தெரியவில்லை. ஆனால், இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  விமர்சனத்திற்குள்ளாகும் எலான் மஸ்க்

  பல்துறைகளில் பிரபலம் வாய்ந்த நபர்கள், சமூக செல்வாக்கு கொண்டவர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு, அவர்களது டிவிட்டர் கணக்கு ஒரிஜினல் என்பதை உறுதி செய்வதற்கான ப்ளூ டிக் ஒன்றை டிவிட்டர் நிறுவனம் இதுவரையிலும் கட்டணமின்றி வழங்கி வருகிறது. இனி அதற்கு மாதந்தோறும் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Elon Musk, Twitter