திருமண நிகழ்வில் நுழைந்து கன்று ஈன்ற பசு.. ஆஸ்திரேலியாவில் ருசிகர சம்பவம்

திருமண நிகழ்வில் நுழைந்து கன்று ஈன்ற பசு.. ஆஸ்திரேலியாவில் ருசிகர சம்பவம்

மாதிரி படம்

கொரோனா காரணமாக குறைவான சொந்தபந்தங்களுடன் நடைபெற்ற திருமணத்துக்குள், திடீரென பசு ஒன்று புகுந்தது. கர்ப்பமாக இருந்த அந்த பசு கூட்டத்தினர் முன்னிலையிலேயே கன்றையும் ஈன்றது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆஸ்திரேலியாவில் திருமணத்தில் புகுந்த பசு ஒன்று, அங்கேயே குட்டியை ஈன்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விக்டோரியா மாகாணத்துக்கு அருகே உள்ள போர்ட்லேண்டில் ஜெசா லாஸ் (Jessa Laws), பென் லாஸ் (Ben Laws) ஆகியோருக்கு திருமண விழா நடைபெற்றது. மணப்பெண்ணான ஜெசா லாஸூக்கு சொந்தமான பண்ணையில் இந்த மணவிழா நடைபெற்றது. கொரோனா காரணமாக குறைவான சொந்தபந்தங்களுடன் நடைபெற்ற திருமணத்துக்குள், திடீரென பசு ஒன்று புகுந்தது. கர்ப்பமாக இருந்த அந்த பசு கூட்டத்தினர் முன்னிலையிலேயே கன்றையும் ஈன்றது.

பண்ணையில் வெட்டவெளியில் திருமண விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அனைவரும் பசு கன்று ஈன்பதை பார்த்து பரவசமடைந்தனர். நண்பர் ஒருவர் பசு கன்று ஈனுவது குறித்து ஜெசா லாஸிடம் கூறியதும், உடனடியாக சேற்றுக்குள் இருந்த பசு அருகில் சென்றுள்ளார். ஜெசா லாஸ் செல்வதற்கு முன்பாகவே பசு தனது கன்றை ஈன்றிருந்தது. இருப்பினும், திருமண விழாவின்போது பசு புதிய கன்றை ஈன்றது ஜெசா லாஸூக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், 1200 டாலர் மதிப்புள்ள வெள்ளை நிற உடையில் இருந்த அவர், சேற்றில் இருந்த கன்றுக்குட்டியை தூக்கியதால், திருமண உடை அழுக்காக இருந்தது. அதே உடையில் திருமணத்தில் கலந்து கொண்ட அவர், தனது பண்ணையில் உருவான பாலில் செய்யப்பட்ட கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். இது குறித்து பேசிய ஜெசா, "திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பே பேசிக்கொண்டோம். பசு நிறைமாதமாக இருக்கிறது.

எப்போது கன்று ஈனும் என்று கூறமுடியாது. ஒருவேளை திருமணத்தன்று கூட கன்று ஈனுவதற்கு வாய்ப்புள்ளது என குடும்பத்தினருடன் பேசிக்கொண்டோம். எதிர்பாராமல் பேசியது தற்போது உண்மையாகியுள்ளது. என்னுடைய திருமண உடை முற்றிலும் சேறாக காட்சியளித்தது. மறக்க முடியாத நிகழ்வாகவும் என்னுடைய திருமணம் அமைந்தது. நான் திருமண மேடையில் இருந்தபோது, என்னுடைய நண்பர் வந்து சேற்றில் இரண்டு கால்கள் தெரிவதாக கூறினார். உடனடியாக நான் அங்கு சென்று பார்த்தேன்.

Also read... மாமியார் கர்ப்பம் - மகன் திருமணத்தில் அறிவித்ததால் மருமகள் அதிர்ச்சி!

டிராமா ( பசுவின் பெயர்) சேற்றில் கன்றுகுட்டியை ஈன்றிருந்தது. திருமணத்துக்கு வந்தவர்கள் எல்லாம் பசு கன்று போடுவதை நேரில் பார்த்துக்கொண்டிருந்தனர்" என்றார். திருமணத்தன்று புதிதாக பண்ணையில் இணைந்த கன்றுக்குட்டி ஜெசா தம்பதியினர் டெஸ்டினி (Destiny) என பெயர் சூட்டினர். இந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ள ஜெசா மற்றொரு சுவாரஸ்யமான தகவலையும் தெரிவித்துள்ளார். அதாவது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரெஸ்டாரன்டில் தனது காதலரை சந்திக்கும்போது Cows Aroundby Corb Lund என்ற பாடல் ஒலித்ததாகவும், அதே பாடல் தன்னுடைய திருமணத்திலும் இசைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால், அந்த பாடல் பாடும்போது டிராமா பசு, புதிய கன்றுக்குட்டியை ஈன்றதகாவும் தெரிவித்துள்ளார். இது தற்செயலாக நடத்த ஒரு Co Incidents என கூறியுள்ளார். தன்னுடைய திருமண உடையை தற்போது டிரை கிளீனிங்குக்கு கொடுத்துள்ளதாகவும், பழையபடி புத்தம் புதிதாக வரும் என நம்பிக்கையில் இருப்பதாகவும் ஜெசா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் திருமண உடையில் சேற்றில் இறங்கி கன்றுகுட்டியை எடுத்து வரும்போது உடை சேறாக இருந்தது, நினைவுகளில் என்றும் மறக்க முடியாத ஒன்று என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: