சுத்தம் சோறு போடும் என்று சொல்லி கேட்டிருப்போம். இங்கே சுத்தம் ஒருவருக்கு லைக்குகள் போட வைத்துள்ளது.
இன்றைய சமூகத்தில் சமூக அக்கறை மனிதர்களிடம் குறைந்து வருகிறதோ என்ற கேள்வி அடிக்கடி எழும். முக்கியமாக குப்பைகளையும் கீழே சிந்தியதையும் மற்றொருவர் வந்து சுத்தம் செய்வர் என்ற போக்கு அதிகம் பார்க்க முடிகிறது.ஆனால் சிறுவன் ஒருவன் செய்த செயல் பெரியவர்களுக்கும் பாடம் எடுப்பதாய் மாறியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவன் ஒருவன் தனது பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை வெளியே எடுக்கும் போது தவறுதலாக அவனது டிபன் பாக்ஸ் கிழே விழுந்து, அதில் இருந்த உணவு மொத்தமும் தரையில் கொட்டியுள்ளது.
இதையும் படிங்க : அந்த புன்னகை விலைமதிப்பற்றது… 80 ஆண்டு கால நட்பின் கொண்டாட்டம்.!
அதை அப்படியே கிடக்கட்டும் என்று நினைக்காமல் உடனே தனது நோட்டு புத்தகத்தில் இருந்து ஒரு தாளை கிழித்து கீழே கொட்டிய உணவை அள்ளி எடுத்துள்ளான். பின்னர் தனது கைக்குட்டையைக் கொண்டு அந்த இடத்தை நன்றாக துடைத்து சுத்தமாக்கி உள்ளான்.
மாணவனின் இந்த செயலை அங்கிருந்த சிலர் புகைப்படமாக எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. அதோடு சம்பந்தப்பட்ட மாணவனுக்கு தற்போது பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
'தூய்மை இந்தியா' இயக்கத்தை சரியாக புரிந்து கொண்டு செயல்படுத்தியுள்ளான் எனவும், இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சமூக அக்கறை என்பது இது போன்ற செயல்கள் மூலம் தான் நிகழும் என்றும், இது போன்ற செயல்களை பகிர்வதன் மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Metro Train, School student, Viral Video