• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 7.9 கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கு நியூஸிலாந்தில் விளைந்தது

7.9 கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கு நியூஸிலாந்தில் விளைந்தது

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் 5 கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கு விளைந்ததே உலக சாதனையாக இருந்தது.

  • Share this:
     

    உலகின் அதிக எடையுள்ள உருளைகிழங்கு நியூஸிலாந்தில் விளைந்துள்ளது.

    நியூசிலாந்தின் வைகாட்டோ (Waikato) பகுதியில் வசிக்கும் கொலின் மற்றும் டோனா தம்பதியினரின் தோட்டத்தில் இந்த உருளைக்கிழங்கு விளைந்துள்ளது. உருளைக்கிழங்கை இவர்கள் பயிரிடாத நிலையில் எதேச்சையாக தோட்டத்தை தோண்டியபோது, இதனை கண்டுபிடித்தனர். 7.9 கிலோ எடையுள்ள இந்த உருளைக்கிழங்கு குறித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவிட வேண்டி கொலின் தம்பதியினர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முன்பாக 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் 5 கிலோ எடையுள்ள உருளைக்கிழங்கு விளைந்ததே உலக சாதனையாக இருந்தது.

    இதுகுறித்து பேசிய தம்பதிகள், “ இது எங்களுக்கு மர்மமாக இருந்தது. இயற்கையின் ஆச்சர்யங்களில் இதுவும் ஒன்றாகும். இதை எங்களால் நம்பவே முடியவில்லை. இந்த உருளைக்கிழங்கு மிகவும் பெரியதாக இருந்தது. நாங்கள் இந்த உருளைக்கிழங்குக்கு தொப்பி அணிவித்துள்ளோம். பேஸ்புக்கில் போஸ்ட் போடுகிறோம். வாக்கிங் போகும் போது கொண்டு செல்கிறோம். இது எல்லாம் கொஞ்சம் வேடிக்கையாகத் தான் இருக்கிறது. ஆனால் மக்களை மகிழ்விப்பதில் ஆச்சர்யமாக இருக்கிறது’ என்றனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: