ஊரடங்கு உத்தரவு: ஒரு வாரத்தில் பாலியல் வீடியோக்கள் பார்ப்பது அதிகரிப்பு

ஊரடங்கு உத்தரவு: ஒரு வாரத்தில் பாலியல் வீடியோக்கள் பார்ப்பது அதிகரிப்பு
முத்தம் முதல் உடலுறவு வரை
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாலியல் இணையதளமான பார்ன் ஹப்பின்(Pornhub) பார்வை 95% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், ஏராளமானவர்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்ட்ட நாளிலிருந்து சமூக வலைதளங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது, பாலியல் உறவு வீடியோக்களைக் கொண்டிருக்கும் இணையதளமான பார்ன் ஹப்பின்(Pornhub) பார்வையாளர்களும் 95% அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அந்த காலத்தில் பார்ன்ஹப், அதனுடைய பிரிமியம் கணக்கை இலவசமாக வழங்கியது. மார்ச் 24-ம் தேதி இந்தியாவில் பார்ன்ஹப்பின் பார்வை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. பின்னர் மார்ச் 27-ம் தேதி பார்ன் ஹப்பின் பார்வை 95 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் பார்ன் ஹப்பின் பார்வை அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், ரஷ்யா ஆகிய நாடுகளில் பார்ன்ஹப் பார்வை அதிகரித்துள்ளது.


அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயினில் கொரோனாவால் அதிக இறப்புகளும் பாதிக்கப்பட்டவர்களும் அதிகரித்த நிலையில் அந்த நாடுகளுக்கு மட்டும் பார்ன்ஹப் பிரியம் கணக்கை ஒரு மாதத்துக்கு இலவசமாக அளித்தது. பார்ன்ஹப் நிறுவனம் இலவசமாக வீடியோவைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை மட்டும் வழங்கவில்லை. அதைத் தவிர, பாலியல் தொழிலாளிகளுக்காக 25,000 அமெரிக்க டாலர் பணத்தையும் வழங்கியுள்ளது. மேலும், 15,000 முகக் கவசங்களையும் வழங்கியுள்ளது.

Also see:
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading