Home /News /trend /

தொடர்ந்து ஆபாச படம் பார்த்து வந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி... சோகத்தில் முடிந்த விபரீத முடிவு

தொடர்ந்து ஆபாச படம் பார்த்து வந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி... சோகத்தில் முடிந்த விபரீத முடிவு

ஆபாச படம்

ஆபாச படம்

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே ஆபாச படத்தில் மனைவி நடித்ததாக கூறி அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆபாச படம் மூலமாக நடைபெறும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகமான ஆபாச படம் பார்க்கும் மோகத்தால் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, பாலியல் பலாத்காரம், கொலை போன்ற அதிர்ச்சி சம்பவங்கள் வாடிக்கையாகி விட்டது. பெங்களூரு அருகே நாமநகர் மாவட்டத்தில் ஆபாச படத்தில் மனைவி நடித்துள்ளதாக கூறி கணவர் அவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூரு ராமநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் பாஷா (40). இவரது மனைவி மூபினா (33). ஜாகீர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். ஜாகீர் பாஷா அளவுக்கு அதிகமாக ஆபாச படங்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்போது ஆபாச படத்தில் அவரது மனைவி போல் ஒருவர் நடித்துள்ளதை பார்த்த ஜாகீருக்கு அவரது மனைவி மூபினா மீது சந்தேகம் வந்துள்ளது.

    இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஜாகீர் தனது மனைவி மூபினாவை பொது இடங்களிலும் சராமாரியாக தாக்க தொடங்கி உள்ளார். இதனால் மூபின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளிக்க முயன்றுள்ளார். ஆனால் அப்போது மூபினா அவரை சமதானபடுத்தி காவல்நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி உள்ளார்.

    Also Read : மணமேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவித்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    இதனிடையே ஒரிரு நாட்களுக்கு முன் ஜாகீர் - மூபினா இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜாகீர் குழந்தைகள் கண்முன்னே மனைவி மூபினை கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த குழந்தைகள் அழற தொடங்கியதால் ஜாகீர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநகர் டவுன் போலீசார் மூபினா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூபினாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்பைடையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீரை தேடி வருகின்றனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Bangalore, Crime News

    அடுத்த செய்தி