• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • காளையுடன் டூயட்... அடக்க வந்த இடத்தில் ஆடிய பரிதாபம்! - வீடியோ

காளையுடன் டூயட்... அடக்க வந்த இடத்தில் ஆடிய பரிதாபம்! - வீடியோ

காளை

காளை

"செண்பகமே செண்பகமே, தென் பொதிகை சந்தனமே’ என பாடியே மாட்டில் பால் கறந்த ராமராஜனை கேள்வி பட்டிருப்போம். ஆனால் காளை மாட்டை ஆடிக் காட்டி அடக்க நினைத்த காளையன் இந்த வருட பொங்கலுக்கு ட்ரெண்டாகியுள்ளார்"

  • Last Updated :
  • Share this:
    எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் செண்பகமே செண்பகமே, தென் பொதிகை சந்தனமே’ என பாடியே மாட்டில் பால் கறந்த ராமராஜனை கேள்வி பட்டிருப்போம். ஆனால் காளை மாட்டை ஆடிக் காட்டி அடக்க நினைத்த காளையன் இந்த வருட பொங்கலுக்கு ட்ரெண்டாகியுள்ளார்.

    பொங்கல் சிறப்பு கொண்டாட்டமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் காளை மாடுகளை அடக்க நினைக்கும் காளையர்கள் செய்யும் குறும்பு தனங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

    அவ்விதம் மஞ்சுவிரட்டு போட்டியில் களம் கண்ட காளை மாட்டை அடக்க இளைஞர்கள் சூழ்ந்து நிற்க ஒருவர் மட்டும் மரத்தில் ஏறி தொங்கிக்கொண்டு இருக்கின்றார்.

    எல்லாம் சூழ்ந்து நின்னுக்கிட்டு இப்படி வேடிக்கை பாத்து டபாய்க்கிறீங்களே! சரியான ஆளுங்களாயிருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா என்ற படி காளை மாடு பார்க்க கவிதையே தெரியுமா என டூயட் பாடியபடி இளைஞர் ஒருவர் மரத்தில் தொங்கிக்கொண்டு வருவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.

    காளை சீறிவருவதை கண்டு அஞ்சி மரத்தில் தொங்குவது போல் காட்சி அளித்தாலும் ரணகளத்துலையும் அவருக்கு ஒரு குதுகலம் என நெட்டிசன்கள் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.


     

    Also see உறியடிக்க மின்கம்பத்தில் ஏறிய நபர்...! கிராம பொங்கல் திருவிழா கலாட்டா - வீடியோ

    எல்லா பக்கமும் அணை கட்டுறாய்ங்களே...! மாடுகள் இடையே மாட்டிக்கொண்ட இளைஞர் - வீடியோ

    பாய்ச்சல்ல சிங்கம்...குணத்துல தங்கம்... மக்கள் மனதை வென்ற காளை...! - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: