இன்ஸ்டாகிராமில் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் நாய்!

’இரு கால்களால் வேகமாக நடக்கும் நாய்’ என கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

news18
Updated: July 31, 2019, 1:36 PM IST
இன்ஸ்டாகிராமில் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் நாய்!
12 லட்சம் சம்பாதிக்கும் நாய்
news18
Updated: July 31, 2019, 1:36 PM IST
இன்ஸ்டாகிராமை ஸ்க்ரால் செய்து கொண்டே நேரம் கடப்பது கூடத் தெரியாமல் சிலர் அதற்கு அடிமையாகி இருப்பார்கள். அதே நேரத்தைத் தனதாக்கி பணம் சம்பாதிக்கும் சில கூட்டமும் இங்கு உண்டு.

குட்டி பொமரேனியன் நாய் இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டுமே 12 லட்சம் சம்பாதிக்கிறது. நம்ப முடிகிறதா... உண்மைதான் ஜிஃப்பாம் என்னும் பொமரேனியன் நாயின் கலக்கலான புகைப்படங்கள் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் மக்களை வெகுவாக ஈர்த்து வசியம் செய்து வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

கியூட் முகத்தை வைத்துக் கொண்டு அது செய்யும் ஒவ்வொரு குறும்புத் தன வீடியோக்களைத் தவிர்க்கவே முடியாது. ஒரே ஒரு வீடியோவைப் பார்த்தால் கூட மேலும் பார்க்கத் தூண்டி அதன் மொத்த வீடியோக்களையும் ஒரே நாளில் பார்த்து முடிப்பீர்கள். 
View this post on Instagram
 

💗


A post shared by jiffpom (@jiffpom) on


அப்படி தன் வீடியோக்கள் மூலம் 9.2 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த சமூக வலைதளங்களைக் கணக்கிட்டால் 30 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டிருக்கிறது. இந்த ஃபாலோவர் பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்களான சூப்பர் உமன், டேனியல்லே ஜோனஸ் ஆகியோரும் உள்ளனர். ஜிஃப்பாம்தான் இன்ஸ்டாகிராமின் மிகப்பெரும் விலங்குகளின் நட்சத்திரப் பிரபலமாக உலகம் முழுவதும் ஜொலிக்கிறது.ஜிஃப்பாம் இன்ஸ்டாகிராமிற்கு வருவதற்கு முன்னரே ’இரு கால்களால் வேகமாக நடக்கும் நாய்’ என கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2017 ஆம் ஆண்டே 8.9 மில்லியன் ஃபாலோவர்களைக் கொண்டு இன்ஸ்டாகிராமின் முதல் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட நாய் என்ற கவுரவத்தையும் பெற்றது. இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாது A Night in Cowtown (2013), Celebs React (2016) and Jacob Sartorius: Hit or Miss (2016) என பல ஹாலிவுட் படங்கள், ஆல்பம் பாடல் வீடியோக்களிலும் நடித்து சினிமா பிரபலமாகவும் வலம் வருகிறது இந்த நாய். இதுமட்டுமல்ல பல ஃபேஷன் மேடைகளில் ஷோஸ்டாப்பராகவும் , மாடலாகவும் அணிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க :

19 குட்டிகளை ஈன்று நாய் சாதனை..!
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...