காலநிலை மாற்றம் ஏற்படுத்திய கொடூரம்...! குட்டிகளை உணவாக சாப்பிடும் பனிக்கரடிகள்...!

காலநிலை மாற்றம் ஏற்படுத்திய கொடூரம்...! குட்டிகளை உணவாக சாப்பிடும் பனிக்கரடிகள்...!
  • News18 Tamil
  • Last Updated: February 29, 2020, 12:14 PM IST
  • Share this:
உணவு கிடைக்காமல் பனிக்கரடிகள் தங்கள் குட்டிகளையே உணவாக உட்கொள்ளும் அவலம் பார்ப்போரை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பெருங்கடல் பகுதியில் பனிப்பாறைகள் உருகி வருகிறது. இதனிடையே அங்கு வசிக்கும் பனிக்கரடிகளுக்கு உணவுகூட கிடைக்காததால் தங்களது குட்டிகளையே இறையாக்கி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனை நேஷனல் ஜாக்ரபிக் (National Geographic) படம் பிடித்து தங்கள் யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதுவரை இந்த வீடியோவை 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.


காலநிலை மாற்றம் ஏற்படுத்திய கோலத்தால், குட்டிகளையே பனிக்கரடிகள் விரட்டி, விரட்டி அடித்துக்கொன்று சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் வீடியோவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also see...திருடச் சென்ற இடத்தில் குடித்துவிட்டு ஷோபாவில் படுத்து உறங்கி காவல்துறையிடம் சிக்கிய பலே திருடன்!

First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading