ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பிரதமருடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ’சுராங்கனி’ பாடல் பாடி மகிழ்ந்த தமிழக வீரர்கள் - வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி!!

பிரதமருடன் தீபாவளி கொண்டாட்டத்தில் ’சுராங்கனி’ பாடல் பாடி மகிழ்ந்த தமிழக வீரர்கள் - வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி!!

பிரதமருடன் ’சுராங்கனி’ பாடல் பாடி மகிழ்ந்த தமிழக வீரர்கள்

பிரதமருடன் ’சுராங்கனி’ பாடல் பாடி மகிழ்ந்த தமிழக வீரர்கள்

தமிழக ராணுவ வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடியின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kargil, India

  இந்தாண்டு தீபாவளியைப் பிரதமர் மோடி லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். கொண்டாத்தில் வீரர்களுக்குப் பிரதமர் மோடி இனிப்புக்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

  அதில் தமிழக வீரர்கள் தமிழில் பிரபல பாடலான “சுராங்கனி சுராங்கனி” பாடலை பாடியுள்ளனர். அந்த தருணத்தின் வீடியோவை பிரதமர் அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

  வீடியோவில், தமிழக வீரர்கள் “சுராங்கனி சுராங்கனி” பாடலை பிரதமர் மோடி முன்னிலையில் பாடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பிரதமர் வீரர்களுக்கு இனிப்புக்களை வழங்குகிறார். இதைப் பதிவிட்ட பிரதமர் மோடி, தமிழக வீரர்கள் அவர்களின் நிகழ்ச்சியில் மூலம் எங்களைப் பரவசம் படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

  மேலும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு டிவிட்டர் வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளி என்பது ஒளி மற்றும் ஒளிக்கதிர்களுடன் தொடர்புடையது. இந்தப் புனிதமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சி தந்து மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் ஓர் அற்புதமான தீபாவளியைக் கொண்டாட வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

  2014ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி இந்தாண்டு தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து, வீரர்கள் ஏஆர் ரஹ்மானின் வந்தேமாதரம் பாடலை உற்சாகத்துடன் பாடிய நிலையில், வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடியும் வந்தேமாதரம் பாடலை கைதட்டி ஆர்வத்துடன் பாடினார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Deepavali, Indian army, PM Modi, Viral Video