வாரணாசியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..!

வாரணாசியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..!
  • Share this:
வாரணாசியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியின் மகள் திருமணத்திற்கு வாழ்த்து கூறி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பி உள்ளார்.

பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்பவர் மங்கல் கெவத். இவர் பிரதமர் மோடியால் தத்து எடுக்கப்பட்ட டோம்ரி கிராமத்தை சேர்ந்தவர்.

இவர் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியிடமிருந்து நேற்று கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் திருமண பெண்ணிற்கும் அவரது குடும்பத்திற்கு தனது வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மங்கல் கெவத் கூறுகையில், எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் மோடிக்கும் அழைப்பு விடுக்க கூறினார்கள். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கும் வாரணாசியில் உள்ள அவரது அலுவலகத்திற்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பினேன்.

ஆனால் அவரிடமிருந்து பதில் வரும் என்று நான் நினைக்கவில்லை. அந்த கடிதம் எனக்கு கிடைத்த உடன் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன். எனது உறவினர்களிடம் பிரதமர் மோடியின் கடிதத்தை காண்பித்து மகிழ்ச்சியுற்று வருகிறேன்“ என்றார்.

 
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading