Home /News /trend /

உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Viral Video : பிரதமர் நரேந்திர மோடி உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மீரட்டின் சர்தானா நகரத்தில் உள்ள சாலவா மற்றும் கைலி ஆகிய இடங்களில் 700 கோடி ரூபாய்க்கு இடையில் இந்த நிறுவனம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    “ஃபிட் இந்தியா” என்ற தலைப்பில் நாடு முழுவதும் பரப்பி, நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, பிரதமர் ஜிம்மிற்குச் சென்றார். பிரதமர் மோடி ஜிம்மில் உள்ள உபகரணங்களை முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு புதிய நலத்திட்டங்களை மத்திய அரசும், யோகி ஆதித்யநாத் அரசும் செயல்படுத்தி வருகின்றன.

     

    தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார். மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் பாஜக சார்பில் ஜனவரி 12 பொங்கல் விழா நடைபெறுகிறது. பொங்கல் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 1,000 பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் விழா நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி பொங்கல் விழாவில் பங்கேற்ற பின் தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார். தமிழக பாஜக பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: PM Modi, Viral Video

    அடுத்த செய்தி