Home /News /trend /

PMModiBirthday : 56 இன்ச் தாலி, 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் வெகுமதி.. மோடி பிறந்தநாளுக்கு டெல்லி உணவகத்தின் அசத்தல் ஆஃபர்

PMModiBirthday : 56 இன்ச் தாலி, 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் வெகுமதி.. மோடி பிறந்தநாளுக்கு டெல்லி உணவகத்தின் அசத்தல் ஆஃபர்

 56 உணவுகள் அடங்கிய தாலி

56 உணவுகள் அடங்கிய தாலி

PMModiBirthday: தாலியில் வட இந்தியாவின் 20 விதமான சப்ஜிகள், விதவிதமான ரொட்டிகள், பருப்பு மற்றும் குலாப் ஜாமூன், குல்பி வகைகளும் இருக்கும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை கொண்டாட பல இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக, டெல்லியின் லுட்யன்ஸில் உள்ள ஒரு உணவகம் 56 அங்குல தாலியை 10 நாட்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதோடு இரண்டு அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல வாய்ப்பு.

டெல்லியில் கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.1 உணவகத்தின் உரிமையாளர் சுவீட் கல்ரா, “நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகர்கள். எங்கள் உணவகம் தாலிகளுக்கு பெயர் பெற்றது. மோடி பிறந்தநாளை நினைவுகூரவும், நாட்டிற்கும் அதன் குடிமக்களுக்காகவும் அவர் செய்ததைக் கௌரவிப்பதற்காகவும் 56 அங்குல தாலியை அறிமுகப்படுத்துகிறோம். இதில் 56 உணவுகள் அடங்கும் ”என்று கூறினார்.

செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 26 வரை தாலி சாப்பிடுபவர்களில், இரண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் கேதார்நாத்திற்கு இலவச சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்ரா கூறினார். இது தனிப்பட்ட முறையில் மோடிஜியை மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

PMModiBirthday: பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு நாடு தழுவிய 15 நாள் இரத்த தான இயக்கம் இன்று தொடங்குகிறது

தாலியில் என்ன இருக்கும்?
தாலியில் வட இந்தியாவின் 20 விதமான சப்ஜிகள், விதவிதமான ரொட்டிகள், பருப்பு மற்றும் குலாப் ஜாமூன், குல்பி வகைகளும் இருக்கும். மதிய உணவான சைவ தாலிக்கு ரூ.2,600 மற்றும் வரியும், அசைவ தாலியின் விலை ரூ.2,900 மற்றும் வரியும். இரவு உணவு தாலிகள் ஒரு தாலிக்கு 300 ரூபாய் கூடுதல் விலையோடு விற்கப்படுகிறது.

ரூ. 8.5 லட்சம் பரிசு:
ஒன்றாக வந்த இருவரில் யாராவது ஒருவர் 40 நிமிடங்களில் தாலியை முடித்தால் அவர்களுக்கு ரூ.8.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அந்த உணவகம் அறிவித்துள்ளது.

பணவீக்கத் தாலி: (INFLATION/RECESSION THALI)
உணவகம் விரைவில் 'பணவீக்கம்/மந்தநிலை தாலி'யை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. “ பணவீக்கம் அதிகரித்துள்ளது, அதை குறைக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடிக்கு எங்களது கோரிக்கை. இன்னும் 10 நாட்களில் அந்தத் தாலி அறிமுகம் செய்யப்படும். ”என்று கடை உரிமையாளர் கூறினார். இந்த உணவகத்தில் புஷ்பா தாலி மற்றும் பாகுபலி தாலியும் வழங்கப்படுகிறது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Modi Birthday, PM Narendra Modi

அடுத்த செய்தி