• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இரு நாடுகளிடையே ஒரே ஒரு பயணியுடன் 2,500 மைல்கள் பறந்த போயிங் விமானம்!

இரு நாடுகளிடையே ஒரே ஒரு பயணியுடன் 2,500 மைல்கள் பறந்த போயிங் விமானம்!

விமான சேவை

விமான சேவை

மருத்துவ சிகிச்சை தேவை காரணமாக ஒரே ஒரு பயணியை மட்டும் அழைத்து கொண்டு குறிப்பிட்ட விமானம் 2,500 மைல்கள் பறந்து சென்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒரு விமானம் ஒரே ஒரு பயணியுடன் சுமார் 2,500 மைல்கள் (4,000 கிலோ மீட்டருக்கும் மேல்) பறந்துள்ளது. போயிங் 737 ஜெட் விமானம் ஒன்றை இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல் (El Al Israel Airlines Ltd.,) தன் நாட்டின் டெல் அவிவ் சிட்டியிலிருந்து, மொரோக்கோ நாட்டிற்கு பறக்க செய்துள்ளது. மொரோக்கோ நாட்டில் உள்ள காசாபிளாங்கா சிட்டிக்கு குறிப்பிட்ட போயிங் பறந்து சென்றுள்ளது. இதற்கு காரணம் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு பயணி அழைத்து வரப்பட்டதே என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை தேவை காரணமாக ஒரே ஒரு பயணியை மட்டும் அழைத்து கொண்டு குறிப்பிட்ட விமானம் 2,500 மைல்கள் பறந்து சென்றுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த நபர் இஸ்ரேலிய தொழிலதிபர் என்று நம்பப்படுகிறது.

ட்ராக்கிங் வலைத்தளமான ஃப்ளைட்ராடார் 24-ன் (FlightRadar24) தரவுகளின் படி, கடந்த 26-ம் தேதி விமானம் LY5051 டெல் அவிவ் நகரின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 17:22 மணிக்கு மொரோக்கோ நாட்டின் காசாபிளாங்காவில் தரையிறங்கியது. இந்த பயணத்திற்கு சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆனது. பின்னர் மீண்டும் அதே ஜெட் விமானம் ஒரே ஒரு பயணியுடன் 19:10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு முன் டெல் அவிவில் தரையிறங்கியது. இந்த திரும்பும் பயணமானது சுமார் 5 மணி நேரத்திற்குள் முடிந்தது.



உள்ளூர் விமான நிருபர் இட்டே புளூமென்டல் (Itay Blumental) இஸ்ரேல் தேசிய கேரியரின் இந்த விமான பயணம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அவரும் தனது ட்வீட்டில் குறிப்பிட்ட விமானமானது ஏப்ரல் 26 அன்று டெல் அவிவிலிருந்து புறப்பட்டு அன்றைய தினம் கடலோர நகரத்திற்கு திரும்பியது என்று கூறி உள்ளார். மேலும் புளூமென்டல் வெளியிட்ட ட்வீட்டில், மொராக்கோ நாட்டில் வசிக்கும் ஒரு இஸ்ரேலிய தொழிலதிபரை, மருத்துவ சிகிச்சைக்காக இஸ்ரேலுக்கு அழைத்து வருவதற்காக எல் அல் ஃப்ளைட் விரைவில் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மொராக்கோவின் காசாபிளாங்கா நகரத்திற்கு ஆம்புலன்ஸ் விமானத்தை (LY5051) இயக்கி உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

Also read... முகக்கவசம் அணிந்தது போல் Prank - சுற்றுலாப் பயணிகளின் பாஸ்போர்ட் பறிமுதல்!

புளூமென்டல் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், இந்த விமானத்தை மடாஸிஸ் மெடிக்கல் ஃபிளைட்ஸ் என்ற நிறுவனம் (Madassis Medical Flights) ஏற்பாடு செய்தது. இது " மேம்பட்ட மருத்துவ உபகரணங்களை விமானத்திற்கு கொண்டு வந்தது, அசூட்டா தீவிர சிகிச்சை மேலாளரும் நிறுவனத்தின் மருத்துவ இயக்குநருமான டாக்டர் அமி மாயோ மேற்பார்வையிட்டார்"என்று குறிப்பிட்டுள்ளார். மற்ற யூசர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த புளூமென்டல், குறிப்பிட்ட பயணி எல்லாவற்றிற்கும் பணம் கட்டியதாக கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: