கின்னசு உலக சாதனைகள், (Guinness World Records), ஒவ்வொரு ஆண்டும் மனிதராலும் இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்கும் புத்தகமாகும். இந்த புத்தகமே காப்புரிமை பெற்ற புத்தக விற்பனையில் சாதனை படைத்துள்ளது. கின்னஸ் சாதனை படைப்பவர்கள் பல வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். தனி மனிதராகவும், சில சமயங்களில் கூட்டு முயற்சியாகவும் கின்னஸ் சாதனைகள் படைக்கப்படுகின்றன. ஒரு சில சாதனைகள் முந்தைய சாதனைகளை முறியடிக்கும் விதமாக நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் பிரபல பீட்சா ரெஸ்டாரண்ட் ஆன பீட்சாஹட் (Pizza Hut) மற்றும் யூடியூபர் ஏர்ராக் உடன் இணைந்து மிகப்பெரிய பீட்சாவை தயாரித்தது. பீட்சா ஹட் ஊழியர்கள் பலர் இணைந்து, பீட்சா மாவை திரட்டி, அதன் மேல் தாக்காளி சாஸ், சீஸ் போன்ற சுவை கூட்டும் உணவு பொருட்களை சேர்த்து, 14,000 சதுர அடி பரப்பளவில் பீட்சாவை தயாரித்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. பிரபல யூடியூபர் ஏர்ராக் (எரிக் டெக்கர்) உதவியுடன் உலகின் மிகப்பெரிய பீட்சாவை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். மிகப்பெரிய பீட்சாவை தயாரிக்க 2244 கிலோ இனிப்பு மரினாரா சாஸ், 630,496 பெப்பரோனிஸ் 3,990 கிலோ சீஸ், 6192 கிலோ மாவு, ஆகிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வளவு பெரிய பீட்சாவை தயாரிக்க ஓவன் இல்லை. அதனால், இதனை சமைக்க ஒரு தனி சாதனத்தை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அந்த இயந்திரம் பீட்சாவின் மீது முழுவதுமாக நகர்ந்து, வேகவைத்துள்ளது. மிகப் பெரிய பீட்சா என்பதால், இதனை சமைத்து முடிக்க வெகு நேரம் எடுத்துள்ளது.
பொதுவாக பெரிய பீட்சாவின் அளவு, ஒவ்வொரு நாட்டைப் பொறுத்து மாறுபடலாம். அவை 12-18 அங்குலங்கள் வரை இருக்கும். ஆனால் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பீட்சா தயாரிப்பு நிறுவனங்கள் 14 அங்குலங்கள் கொண்ட பீட்சா தயாரிப்பைத்தான் பின்பற்றுகின்றன. இதுவரை Pizzadom இல் மட்டும் தான் மிகப்பெரிய பீட்சா தயாரிக்கப்பட்டது என்ற கூற்றை pizza hut முறியடித்துள்ளது.
"தி பிக் நியூ யார்க்கர்" ரெசிபியை திரும்பப் பெற்றதன் நினைவாக, பீட்சா ஹட் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. 14,000 சதுர அடி பரப்பளவில் செய்யப்பட்ட பீட்சாவை சுமார் 68,000 பீட்சா துண்டுகளாக வெட்டப்பட்டு, அங்குள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த 2012 ஆம் ஆண்டு, இத்தாலியன் சமையல்கலை நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட gluten-free pizza உலகின் மிகப்பெரிய பீட்சா என கருதப்பட்டது. அதன் மொத்த பரப்பளவு 13,580 சதுர அடி ஆகும். ஆனால் 14,000 சதுர அடியில் pizza hut தயாரித்துள்ள இந்த பிரமாண்ட பீட்சா அந்த சாதனையை முறியடித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.