Home /News /trend /

அயர்ந்து தூங்கியதால் இறங்கு பாதையை தவற விட்ட விமானிகள்... அடுத்து நடந்தது?

அயர்ந்து தூங்கியதால் இறங்கு பாதையை தவற விட்ட விமானிகள்... அடுத்து நடந்தது?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விமானத்தை தரையிறக்க வேண்டிய இடத்தை தவறவிட்டு விமானிகள் தூங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Indian Telephone Industry, India
    விமானத்தை இயக்கி வந்த விமானிகள் பயணத்தின்போது தூங்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இருப்பினும், பெரும் விபத்து ஏற்படாமல் இருந்துள்ளது.

    எத்தியோப்பியா ஏர்லைனைச் சேர்ந்த இரு விமானிகள் சூடானின் கார்டோவுமிலிருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகருக்கு விமானத்தை இயக்கிச் சென்றுள்ளனர். போயிங் 737 ரக விமானத்தைத்தான் விமானிகள் இயக்கி வந்துள்ளனர். விமானப் பயணத்தின்போது விமானிகள் இருவரும் தூங்கியுள்ளனர். இருப்பினும், போயிங் 737 விமானத்தின் தானியங்கி தொழில்நுட்பம் விமானத்தில் 37,000 அடி உயரத்தில் விமானத்தைப் பத்திரமாக இயக்கியுள்ளது.

    விமானம் தரையிறங்கக் கூடிய இடம் வந்தபோது, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், விமானிகள் தரப்பிலிருந்து எந்த பதில் தகவலும் வரவில்லை. எனவே, விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறையில் அச்சம் ஏற்பட்டுள்ளது. விமானிகளைத் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து பலமுறை முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. விமானம் தரையிரங்க வேண்டிய இடத்தைத் தாண்டி சென்றுள்ளது.

    Also Read : இது கதவா ? காரா?.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்த வைரல் வீடியோ.!

    தரையிறங்க வேண்டிய இடத்தைத் தாண்டி விமானம் சென்றதன் காரணமாக விமானத்திலிருந்த எச்சரிக்கை அலாரம் தானாக ஒலி எழுப்பியுள்ளது. அதன்பிறகுதான் விமானிகள் எழுந்துள்ளனர். அதன்பிறகு விமானிகள் விமானத்தை லாவகமாக திருப்பிக் கொண்டு அவர்களுடைய இறங்குதளத்தில் தரையிறக்கியுள்ளனர்.

    அவர்கள் தூங்கி இறங்கு பாதையை தவறவிட்டதன் காரணமாக 25 நிமிடம் தாமதாக விமானம் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த அஜாக்ரதையின் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இத்தனை அஜாக்ரதையாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Archana R
    First published:

    அடுத்த செய்தி