ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

'கண்ணான கண்ணே'.. மகள் ஓட்டும் விமானம்.. ஆனந்த கண்ணீரில் தந்தை.. இதயங்களை வென்ற பதிவு!

'கண்ணான கண்ணே'.. மகள் ஓட்டும் விமானம்.. ஆனந்த கண்ணீரில் தந்தை.. இதயங்களை வென்ற பதிவு!

பைலட் - தந்தை வைரல் வீடியோ

பைலட் - தந்தை வைரல் வீடியோ

பயிற்சி காலத்தில் சில சமயங்களில் நான் அதிகாலை 3-4 மணிக்கு வீட்டை விட்டு புறப்படுவேன். அப்போதும் அவர்களது கால்களைத் தொடாமல் வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்" என்றார் திருவள்ளுவர். குழந்தைகள் திறமைசாலிகளாகி வெற்றியின் உச்சத்தை எட்டினால், பெற்றோருக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. அந்த வெற்றியை காணும் நிமிடம் அவர்கள் தங்கள் வாழ்க்கை பலனையே அடைந்து விட்டதாக மகிழ்ச்சி அடைவர். அப்படி ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேப்டன் க்ருடாட்னியா ஹேல் என்பவர் தனது pilot_krutadnya இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனவரி 7 அன்று ஒரு கிளிப்பை வெளியிட்டார்.  8.3 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ள அந்த க்ளிப்பில் தான் இயக்கவுள்ள முதல் விமான பயணத்தை தொடங்கும் போது அதே விமானத்தில் பயணிக்கும் தனது தந்தையிடம் விமானி ஆசி பெரும் காட்சி பார்ப்பவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பயிற்சி முடிந்து தனது முதல் விமான பயத்தை தொடங்கும் முன் கேப்டன் க்ருடாட்னியா ஹேல் தனது முதல் பயணத்தை பதிவு செய்கிறார்.  விமானி கேமராவை நோக்கி கை அசைப்பதில் இருந்து வீடியோ தொடங்குகிறது, பின்னர்  விமானத்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருக்கும் தனது தந்தையிடம் செல்கிறார். பின்னர்  அவரது தந்தையின் பாதங்களை தொட்டு ஆசிர்வாதம் வாங்குகிறார்,

தந்தை-மகள் இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைந்து அன்பை பரிமாறுகின்றனர். தனது மகளது வளர்ச்சியை கண்டு பெருமித உணர்வுடன் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் தந்தை. இந்த காட்சியை அவரது ஆனந்த கண்ணீர் என்ற தலைப்பிட்டு கேப்டன் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

“எப்போதும்  என் பெற்றோரின் ஆசீர்வாதமின்றி என் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. பயிற்சி காலத்தில் சில சமயங்களில் நான் அதிகாலை 3-4 மணிக்கு வீட்டை விட்டு புறப்படுவேன். என் பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர். அப்போதும் அவர்களது கால்களைத் தொடாமல் வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை. அப்படி செய்யாவிட்டால் நாள் முழுமையடையாது,” என்று ஹேல் வீடியோவில் எழுதினார். இது நெட்டிசன்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

First published:

Tags: Flight, Viral Video