பறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..!

பறக்காத புறாவும், நடக்காத நாய்க்குட்டியும் : நியூயார்க்கின் ட்ரெண்டிங் நண்பர்கள்..!
ஹெர்மன் மற்றும் லுண்டி - நியூயார்க் ட்ரெண்டிங்
  • News18 Tamil
  • Last Updated: February 20, 2020, 10:55 AM IST
  • Share this:
குறைபாடுகளோடு மீட்கப்பட்ட ஹெர்மன் என்னும் புறாவும், லுண்டி என்னும் இந்த நாய்க்குட்டியும் இணைபிரியாமல் விளையாடும் வீடியோதான் இன்றைய Feel Good கண்டெண்ட்.

நரம்பு மண்டல நோய் பாதிப்பால் பறக்கமுடியாமல் போன ஹெர்மன் என்னும் புறாவும், பின்னங்கால்களின் பிறவிக் குறைபாட்டால் நடக்க முடியாத லுன்டி என்னும் நாய்க்குட்டியும் இணைபிரியாத நண்பர்களாக ஒன்றாகவே இருக்கும் வீடியோ வலைதள பார்வையாளர்களால் நெகிழ்ச்சி ஸ்டேடஸ்களோடு பகிரப்பட்டு வருகிறது.

நியூயார்க்கின் ரோசெஸ்டர் நகரின் மியா அறக்கட்டளையில் இருக்கும் ஹெர்மன் என்னும் பறக்க முடியாத புறாவும், கால்கள் குறைபாட்டால் நடக்க முடியாத லுண்டி நாய்க்குட்டியும் இணை பிரியாமல் நட்பை வளர்ப்பதுதான் அந்த நகரத்தின் சென்சேஷன்.
காயமடைந்தோ, நோய் குறைபாடுகளாலோ பாதிக்கப்பட்ட விலங்குகளை பொதுவாக அமெரிக்க பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவது அந்நாட்டின் வழக்கம். சி.என்.என் அறிக்கைத் தகவலின்படி, சில விலங்குகளை பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பாமல் தொண்டு நிறுவனங்களிலேயே வைப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. குறைபாடுகளுள்ள அந்த விலங்குகளை பள்ளிக் குழந்தைகளின் Anti Bullying (கேலி தடுப்பு, புண்படுத்துதலுக்கு எதிரான பயிற்சிகள்) பயிற்சிகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அப்படி பாதுகாக்கப்படும் விலங்குகளில் ஹெர்மனும், லுண்டியும்தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்கள்.

Also See...
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading