நேரலையில் இருந்த செய்தியாளரை துரத்திய காட்டுப் பன்றி! வைரல் வீடியோ

நேரலையில் இருந்த செய்தியாளரை துரத்திய காட்டுப் பன்றி! வைரல் வீடியோ
பன்றி
  • News18
  • Last Updated: November 28, 2019, 8:16 PM IST
  • Share this:
கிரீஸ் நாட்டில் செய்தியாளர் ஒருவர் நேரலையில் இணைந்திருந்தபோது அவரை காட்டுப் பன்றி ஒன்று துரத்தியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கிரீஸ் நாட்டின் கினெடா நகரத்திலிருந்து வெள்ள பாதிப்பு குறித்து செய்திகளை லாஸோஸ் மன்டிகோஸ் என்ற செய்தியாளர் நேரலையில் விவரத்துள்ளார். அவர், நேரலையில் வெள்ள பாதிப்பு குறித்து விவரிக்கும் போது அங்கிருந்த காட்டுப் பன்றி ஒன்று அவரைத் துரத்தியுள்ளது. காட்டுப் பன்றியைக் கண்டு அவர் பயந்து ஒதுங்குவார்.

அந்தப் பன்றி அவரை விடாமல் துரத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பானது. செய்தியாளர் லாஸோஸுடன் செய்தியறையில் இணைப்பில் இருந்த செய்தி வாசிப்பாளர்களும் இந்தக் காட்சிகளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். தற்போது, அந்தக் காட்சிகள் எல்லைகளைக் கடந்து வைரலாகப் பரவிவருகிறது.
Also see:

 

 
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்