ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

டூவிலரில் 6 பேர் ரைடு.. புள்ளிங்கோ அட்டகாசம்.. வீடியோ வைரலானதால் வகுப்பெடுத்த போலீஸ்

டூவிலரில் 6 பேர் ரைடு.. புள்ளிங்கோ அட்டகாசம்.. வீடியோ வைரலானதால் வகுப்பெடுத்த போலீஸ்

உபி யில் ஒரே வண்டியில் 6 பேர் பயணம்

உபி யில் ஒரே வண்டியில் 6 பேர் பயணம்

3 இருசக்கர வாகனத்தில் 14 இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • uttar |

இரு சக்கர வாகனம் இருவருக்கே என்று நாடு முழுக்க எத்தனை பேனர்கள் வைத்தாலும் நம் ஊர் இளவட்டங்களுக்கு அது கண்ணுக்கே தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதை உதாசீனம் செய்து விட்டு ஒரே பைக்கில்  மூன்று பேர் செல்வது நான்கு பேர் அமர்ந்து செல்வது  என்று தான் ரகளை செய்வர்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இதையெல்லாம் மிஞ்சி ஒரு வண்டியில் 6 பேர் அமர்ந்து பயணித்துள்ளனர். 3 இருசக்கர வாகனங்களில் 14 பேர் அமர்ந்து ஆபத்தாக பயணித்து ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் மூன்று பைக்குகளில் ஒரு வண்டியில் 6 பேர், மற்ற இரண்டு வண்டிகளில் தலா 4 பேர் என்று பயணித்துள்ளனர். இதை ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, அவர்கள் ஸ்டண்ட் செய்வதை போலீசார் பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் பரேலியின் தியோரானியா PS பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி பைக்குகளை பறிமுதல் செய்தனர்."தகவல் கிடைத்ததும், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று மூத்த பரேலி போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார் சௌராசியா கூறினார்.

First published:

Tags: Bike, Police case, Uttar pradesh