Home /News /trend /

வொர்க் ஃபிரம் ஹோம் கேள்விப்பட்டு இருப்பீங்க.. ஆனா இது புதுசு - வைரல் புகைப்படம்

வொர்க் ஃபிரம் ஹோம் கேள்விப்பட்டு இருப்பீங்க.. ஆனா இது புதுசு - வைரல் புகைப்படம்

Trending

Trending

Viral Photo | பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர், புதிய பாணியில் வேலை செய்வதாக வெளியாகியுள்ள புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

உலகெங்கிலும் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பணி செய்வதே மரபாக இருந்து வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு வொர்க் ஃபிரம் ஹோம் கலாச்சாரமும் பிரபலமாகியுள்ளது. அலுவலகத்தில் பணி அல்லது வீட்டில் இருந்தே பணி என இந்த இரண்டில் எது சிறந்தது, எது அனைவருக்கும் பயனளிக்கக் கூடியது என்பது தொடர்பாக அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இப்படியொரு சூழலில், பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர், புதிய பாணியில் வேலை செய்வதாக வெளியாகியுள்ள புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. லிங்க்டு இன் இணையதள யூசர் ஹர்ஷ்ப்ரீத் சிங் இந்த படத்தை ஷேர் செய்துள்ளார். பெங்களூரு மாநகரின் பிரதான மேம்பாலம் ஒன்றில், இரவு 11 மணியளவில் பைக்கில் பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் ஒருவர் லேப்டாப் பயன்படுத்திக் கொண்டே செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து ஹர்ஷ்ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், “பெங்களூரு சிறப்பாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா? இந்த மாநகரத்தின் பிரதான மேம்பாலம் ஒன்றில் பைக்கில் பின்னால் அமர்ந்து செல்லும் நபர் ஒருவர் லேப்டாப் பயன்படுத்திக் கொண்டே செல்கிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை அபிஷேக் வர்கியா என்பவர் ரீஷேரிங் செய்துள்ளார். அவரது பதிவில், “அலுவலகத்தில் கொடுக்கப்படும் டெட்லைன் என்பது உயிருக்கு ஆபத்தானதாக மாறுவது நல்லதல்ல. ஊழியர்கள் மற்றும் ஜூனியர் பணியாளர்களுக்கு டெட்லைன் மீது நெருக்கடி கொடுக்கும் பழக்கத்தை நிறுவனங்களும், மூத்த அதிகாரிகளும் கைவிட வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.தனி வாழ்க்கையில் கவனம் தேவை

அபிஷேக் வர்கியா தெரிவித்துள்ள கருத்தை சமூக வலைதள யூசர்கள் பலரும் ஆமோதித்துள்ளனர். என்ன தான் வேலையும், சம்பாத்தியமும் முக்கியம் என்றாலும் கூட, வாழ்க்கைக்கும், அலுவலகப் பணிக்கும் இடையே சமநிலையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Also Read : குண்டு துளைக்காத ஐபோன்..உக்ரைன் வீரரின் உயிரைக் காத்த அதிசயம்!

இதுகுறித்து யூசர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “ஊழியர்களின் நலன் குறித்து யார் கவலைப்படுகிறார்கள்? லட்சக்கணக்கான நபர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒருவர் இறந்தால், அந்த வேலைக்கு சேர 20 பேர் தயாராக இருக்கின்றனர். இதுதான் தொடர் கதையாக இருக்கிறது. நிர்வாகத்திற்கும் இது நன்றாக தெரியும். அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் இத்தகைய துயரங்கள் நடக்கத்தான் செய்யும். மக்கள் இங்கு வெறும் பண்டங்கள் மட்டுமே’’ என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.

அவர் என்னுடைய நண்பர்

சமூக வலைதள பதிவுகளுக்கு பதில் அளித்துள்ள நபர் ஒருவர், “பெங்களூரில் உள்ள அனைத்து இளைஞர்களும் மென்பொருள் பணியாளர்கள் கிடையாது. பைக்கில் செல்லும் நபர் என்னுடைய நண்பர் தான். அவருடைய மொபைலில் சார்ஜ் குறைந்துவிட்டது. இதனால் லேப்டாப் மூலமாக விமான டிக்கெட்டை அவர் முன்பதிவு செய்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.

Also Read : மலிவான மீன்களை சாப்பிட முடியாது... அடம்பிடிக்கும் பென்குயின்களின்

என்ன காரணத்திற்காக லேப்டாப் பயன்படுத்தி இருந்தாலும், பைக்கில் செல்லும்போதே அதை உபயோகிக்கும் அளவுக்கு நம் வாழ்க்கையை அவசர சூழலுக்குள் தள்ளிக் கொள்ளாமல் சமநிலைத்தன்மையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. ஊழியர்களின் நலன் குறித்து யார் கவலைப்படுகிறார்கள்? லட்சக்கணக்கான நபர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்
Published by:Selvi M
First published:

Tags: Photo, Trending

அடுத்த செய்தி