HOME»NEWS»TREND»photographer lost his senses after spotting rare white moose in swedish forest vin ghta

வெள்ளை வகை மானை கண்ட பின் சொக்கிப்போய் நின்ற போட்டோகிராபர்!

2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனாவிற்கு மத்தியில் ஒரு மூஸ் கொல்லப்பட்டதை அடுத்து கனடா மக்கள் உண்மையில் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

வெள்ளை வகை மானை கண்ட பின் சொக்கிப்போய் நின்ற போட்டோகிராபர்!
வெள்ளை மூஸ்
  • News18
  • Last Updated :
  • Share this:

ஒரு வனவிலங்கு புகைப்படக் கலைஞர் (wildlife photographer) ஸ்வீடனின் வர்ம்லாண்டில் (Sweden’s Varmland) ஒரு அரிய வெள்ளை மூஸைக் (ஒரு வகை மான்) கண்டு உறைந்துபோயுள்ளார். அவர் முதலில் வர்ம்லாண்டின் கிராமப்புறங்களில் நடந்து கொண்டிருந்தபோது, இந்த மூஸைக் (moose) கண்டார், இந்த மான் வகையில் ஒரு மந்தமான மரபணு இருப்பதால் இது முற்றிலும் வெண்மையாக மாற்றமடைந்துள்ளது என்று டெய்லி மெயில் (Daily Mail) செய்தி வெளியிட்டுள்ளது. 

ரோஜர் பிரெண்டகன் (Roger Brendhagen) என்ற போட்டோகிராபர் நோர்வேயின் ஒஸ்லோவில் (Norway’s Oslo) வசிப்பவர். இந்த வெள்ளை மூஸைப் பற்றி பேசுகையில், ரோஜர், "நான் என் வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான மான்களை பார்த்துள்ளேன், அவைகளை போட்டோவும் எடுத்துள்ளேன். ஆனால் இந்த ஸ்வீடிஷ் காடுகளில் (Swedish forests) இந்த அரிய வெள்ளை இன மானை நான் கண்டபோது, உண்மையில் மெய் மறந்துதான் போனேன், கடவுளுக்கு நன்றி நல்ல வேலை நான் என் கேமராவை மறக்கவில்லை" என்று கூறினார். 

மேலும் அந்த மூஸின் போட்டோக்கள் இப்போது இணையத்தில் வெளிவந்து பலரையும் கிறங்கடித்து வருகிறது. 52 வயதான இந்த போட்டோகிராபர், அந்த மானின் இனத்தை போல 30 விலங்குகள் உள்ள இடத்தில் இந்த கண்கவர் வெள்ளை மூஸைக் கண்டுபிடித்தார். இந்த வெள்ளை மூஸ் ஒரு ரிசிஸிவ் ஜீன் (recessive gene) காரணமாக இந்த பண்பைக் கொண்டுள்ளது. இந்த மான் வகை ஒரு சில பழுப்பு நிற புள்ளிகளுடன் முற்றிலும் வெண்மையாக காணப்படுகிறது. வெள்ளை மூஸ் பெரும்பாலும் ஸ்வீடனில் காணப்படுகிறது, இருப்பினும், அவற்றில் சில கனடா மற்றும் அமெரிக்காவின் அலாஸ்காவிலும் காணப்படுகின்றன. கண்கள், முடி அல்லது தோலைச் சுற்றியுள்ள பகுதிகள் வெண்மையாக மாறும் இந்த நிலை அல்பினிசத்திற்கு ஒத்ததல்ல. பைபால்டிஸத்தில், ரோமங்களின் நிறம் பாதிக்கப்படுகிறது. லியூசிசம் என்ற பரந்த நிலையின் கீழ் இவை வருகின்றன, அதாவது நிறமியின் ஓரளவு இழப்பால் ஆகவே இந்த மான் காண்போரை சுண்டி இழுக்கிறது. 

வெள்ளை மூஸின் அம்சங்களைப் பற்றி பேசிய ராபர்ட், இத்தகைய  மான் ஓரளவு அல்லது முற்றிலும் வெள்ளை நிறமாக மாறக்கூடும் என்று விளக்கினார். கண்கள், வாய்ப்பகுதி மற்றும் நகங்கள் அல்பினிசத்தைப் போலல்லாமல் சாதாரண நிறமிகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார். ரோஜர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் (Instagram) இந்த படத்தைப் பகிர்ந்து, "உங்கள் அனைவருக்கும் வெள்ளை கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!" என்று போஸ்ட் செய்திருந்தார்.
 
View this post on Instagram
 

A post shared by Roger Brendhagen (@roger_brendhagen)


மூஸின் இந்த படங்களை பார்த்து மக்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு நபர், "நான் முன்னர் ஒரு வெள்ளை கிறிஸ்மூஸைக் (Christmoose) கனவில் கண்டேன், அது இங்கே இருக்கிறது. அற்புதமான ஷாட்." என்றார். மற்றொரு நபரோ, "பூமியின் மிக அழகான மூஸின் அற்புதமான போட்டோ" இதுதான் என்றார். சமீபத்தில், கனடாவின் வடக்கு ஒன்டாறியோவில் (Ontario), ஒரு வெள்ளை மூஸ் வேட்டை (white moose hunting) சம்பவம் நடந்தது. 

Also read... இனி இந்த ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது!

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு 5600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மூஸ் கொல்லப்பட்ட பின்னர் அவரது வேட்டை உரிமம் (hunting licence) இடைநிறுத்தப்பட்டது. முன்னதாக, கனடாவில் வெள்ளை மூஸைக் கொன்ற வேட்டைக்காரனைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு கூட்டம் நிதியளிக்கும் சம்பவமும் நடந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. ஸ்பிரிட் மூஸ் (spirit moose) என்றும் அழைக்கப்படும் இந்த மான் வகை 2006 இல் இயற்கை வளங்கள் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் (Ministry of Natural Resources and Forestry) பாதுகாக்கப்பட்டது. 

2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனாவிற்கு மத்தியில் ஒரு மூஸ் கொல்லப்பட்டதை அடுத்து கனடா மக்கள் உண்மையில் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பலரும் அவர்களது சமூக பக்கங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். உயிரினங்கள் அவைகளின் போக்கில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களின் கால்தடம் பட்டபின் அவைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை முடிவிற்கு வரும் என்பதற்கு கனடாவில் நடந்த சம்பவம் ஒரு உதாரணம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: