ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அரியவகை வெள்ளை வானவில்.. அதிசய காட்சியை படம் பிடித்த ஃபோட்டோகிராபர்

அரியவகை வெள்ளை வானவில்.. அதிசய காட்சியை படம் பிடித்த ஃபோட்டோகிராபர்

வெள்ளை வானவில்

வெள்ளை வானவில்

Colourless Rainbow | கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டு பெர்மன் என்ற புகைப்பட நிபுணர் நிறமில்லா வான வில்லை புகைப்படம் எடுத்துள்ளார். வெண்புகை போல காணப்படும் இந்த வானவில்லின் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வானவில்லை கண்டால் யாருக்கு தான் பிடிக்காது. சிறு வயது முதலே மழை பெய்கிறது என்றாலே வானத்தில் வானவில் தெரிகிறதா என்று பார்க்கத்தான் மனம் ஏங்கும். ஏழு வண்ணங்களுடன் மிக அழகாக இருக்கும் அந்த வானவில்லை பார்க்கும்போதே ரம்மியமாக இருக்கும். அதே வானவில் நிறங்களே இல்லாமல் வெறும் வெண் புகையாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வானவில்லை தான் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த புகைப்பட நிபுணர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.

தொழில்முறை புகைப்பட நிபுணரான அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு அழகிய ஆச்சரியபடத்தக்க புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். முக்கியமாக உலகில் உள்ள இயற்கை காட்சிகளை மிக ரம்மியமான முறையில் படம் பிடித்து பதிவேற்றம் செய்கிறார். அந்த வகையில் அவர் படம் பிடித்தநிறமில்லா வானவில் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன் அவர் பதிவேற்றம் செய்த அந்த புகைப்படத்தி கீழ் ”நேற்று காலை மரின் ஹெட்லாண்டில் வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது முன் எப்போதும் பார்த்திடாத அதிசய காட்சி ஒன்றை பார்த்தேன். அது ஒரு புகை வானவில்.


இந்த வானவில்லை பற்றி அவர் கூறுகையில் “இதை வெள்ளை வானவில், மேக வானவில், பேய் வானவில், புகை வானவில் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. சாதாரண வானவில்லை போலவே இவையும் சூரிய வெளிச்சம் மழைத்துளிகளில் பட்டு எதிரொளிப்பதால் உண்டாகிறது. காற்றில் மழைத்துளிகள் அதிக அளவில் நிறைந்து இருக்கும் போது வானவில் ஏற்படும். எப்பொழுதும் ஏற்படும் வானவில் போலவே இந்த புகைவானவில்லும் சூரியனுக்கு இருக்கும் திசைக்கு எதிர்ப்புறமாகவே ஏற்படும்.

Also Read : பாறைகளுக்கு இடையில் மறைந்திருக்கும் சிறுமி.! 13 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா.?

பிறகு எவ்வாறு சாதாரண வானவில்லில் இருந்து இந்த வெண்ணிற புகை வானவில் வேறுபடுகிறது என நீங்கள் கேட்கலாம். பெரிய அளவு மழைத்துளிகள் இருக்கும் போது நிறங்களுடைய வானவில் ஏற்படுகிறது. இதுவே மிகச்சிறிய அளவிலான மழைத்துளிகள் மேகங்களில் இருக்கும் போது இந்த வெள்ளை நிற வானவில் ஏற்படுகிறது. மிகச் சிறிய அளவில் மழைத்துளிகள் இருப்பதால் அவற்றால் நிறங்களை பெரிதளவில் எதிரொலிக்க முடிவதில்லை எனவேதான் இந்த வானவில் வெண் புகையைப் போல காட்சியளிக்கிறது.

இந்த வகை வெண்புகை வானவில்களை சூரிய வெளிச்சம் அதிகமாக இருக்கும் போது, பனிமூட்டம் மெல்லிய படலம் போல இருக்கும் வேளைகளில் கடலின் மேற்பரப்பில் காண முடியும். சாதாரண வானவில்லை விட இவை சிறிய அளவிலேயே இருக்கும்.

இந்த புகைப்படத்தின் மையத்தை உற்று கவனித்தீர்கள் என்றால், இந்த வானவில்லின் மகிமையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதில் நான் அந்த வானவில்லை உடைத்து நடந்து வந்த இடம் தெரியும்” என்று அந்த புகைப்படத்தின் கீழ் கேப்ஷனை சேர்த்துள்ளார்.

Also Read : உடலை வில்லாய் வளைத்து உலக சாதனை படைத்த சிறுமி.. வைரல் வீடியோ

இவரின் இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த புகைப்பட நிபுணரையும் பாராட்டி வருகின்றனர். மேலும் பார்ப்பதற்கு அரிதான இந்த வானவில்லை ரசித்து, அதனை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தும் வருகின்றனர்.

Published by:Selvi M
First published:

Tags: Nature Beauty, Photo, Tamil News, Trending