Home /News /trend /

முதல்முறையாக 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று உலக சாதனை படைத்த டி-சீரிஸ் இந்திய யூடியூப் சேனல்!

முதல்முறையாக 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் பெற்று உலக சாதனை படைத்த டி-சீரிஸ் இந்திய யூடியூப் சேனல்!

 டி-சீரிஸ்

டி-சீரிஸ்

இதுவரை எந்த யூடியூப் சேனலும் அடைந்திடாத புதிய உச்சத்தை டி-சீரிஸ் என்கிற யூடியூப் சேனல் அடைந்துள்ளது. இந்த சேனலை சுமார் 200 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் நாம் பதிவிட்ட ஏதோவொரு வீடியோ அல்லது போட்டோ வைரலாகினாலே நமக்கு அளவுகடந்த மகிழ்ச்சி உண்டாகும். அந்த வகையில் யூடியூப் தளத்தில் பல்வேறு வகையான சாதனைகளை யூடியூபர்கள் செய்து வருகின்றனர். 1 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்றால் சில்வர் பட்டன், 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றால் கோல்டு பட்டன், 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றால் டைமண்ட் பட்டன் போன்ற பல சிறப்பு பட்டன்கள் மற்றும் பரிசுகளை தனது யூடியூபர்களுக்கு யூடியூப் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் இதுவரை எந்த யூடியூப் சேனலும் அடைந்திடாத புதிய உச்சத்தை டி-சீரிஸ் என்கிற யூடியூப் சேனல் அடைந்துள்ளது. இந்த சேனலை சுமார் 200 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். உலகளவில் முதல் முறையாக 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளது டி-சீரிஸ் யூடியூப் சேனல். அதுமட்டுமன்றி இது ஒரு இந்திய யூடியூப் சேனல் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக 'பியூடிபை' (PewDiePie) என்கிற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த யூடியூபரின் சேனல் தான் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்று முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த சாதனையை முறியடித்து தற்போது புதியதொரு இலக்கை எட்டியுள்ளது இந்த டி-சீரிஸ் யூடியூப் சேனல்.

டி-சீரிஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான பூஷன் குமார் அவர்களிடம் இந்த சாதனையை குறித்து கேட்டபோது, "இவ்வளவு சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் இந்திய யூடியூப் சேனலாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். யூடியூப்பில் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்த முதல் சேனலாக உள்நாட்டு இந்திய சேனல் மாறியிருப்பதால், இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணமாக இருக்கும்.



எங்களின் படைப்புகளை மிகவும் அன்புடனும் போற்றுதலுடனும் ஏற்றுக்கொண்ட, உலகெங்கிலும் உள்ள எங்களின் ரசிகர்களுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த வெற்றியின் மூலம் படைப்பு தான் எல்லாவற்றிற்கும் முக்கியம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்! மிக திறமையான குழுவைக் கொண்டிருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி, அவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை, மேலும் இந்த வெற்றியை எனது டிஜிட்டல் மற்றும் இசைக் குழுக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

 

 



 

 

கடந்த ஒரு வருடமாக டி-சீரிஸ் தனது நம்பர் 1 இடத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வரிசையில் இரண்டாம் இடத்தை அமெரிக்காவை சேர்ந்த 'கோகோமெலன் - நர்சரி ரைம்ஸ்' என்கிற யூடியூப் சேனல் பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை இந்தியாவை சேர்ந்த 'SET இந்தியா' யூடியூப் சேனலும், நான்காம் இடத்தை 'பியூடிபை' யூடியூப் சேனலும் பிடித்துள்ளது. டி-சீரிஸ் யூடியூப் சேனலை 200 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்ய பாலிவுட் பிரபலங்கள் அதிகம் உதவியுள்ளனர். அந்த வகையில் அனில் கபூர், சல்மான் கான், அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ட்விட்டரில் #BharatWinsYoutube என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தங்கள் ஆதரவைக் காட்டியுள்ளனர்.

 



கடந்த ஆண்டுகளில் 88,984,448 சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையுடன் யூடியூப்பில் பியூடிபை சேனல் முதலிடத்தில் இருந்தது, அதே நேரத்தில் டி-சீரிஸ் 88,962,196 சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்துள்ளது. சிறிது காலத்திற்கு, டி-சீரிஸ் முதல் இடத்தைப் பிடித்தது, பிறகு சில மாதங்களுக்கு பின் அதை மீண்டும் பியூடிபை சேனல் கைப்பற்றியது.

 



பியூடிபை சேனலுக்கு அதிக பேரை சப்ஸ்கிரைப் செய்ய சொல்லி, இரண்டு ஹேக்கர்கள் கூகுள் சாதனங்களை ஹேக் செய்தனர். குறைந்தது 70,000 கூகுள் குரோம்கேஸ்ட் சாதனங்களை ஹேக் செய்து, அவர்களை பியூடிபை சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யும்படியாக ஒரு செய்தியை அதில் இணைத்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Youtube

அடுத்த செய்தி