Home /News /trend /

திருட முற்பட்டபோது உடனடி கர்மவினைப் பயனை அனுபவித்த பெண் - வீடியோ வைரல்!

திருட முற்பட்டபோது உடனடி கர்மவினைப் பயனை அனுபவித்த பெண் - வீடியோ வைரல்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ தான் தற்போது வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி. ஆனால், சிசிடிவி கேமராக்களின் வருகையால் இப்போதெல்லாம் திருடர்கள் உடனுக்குடன் மாட்டிக் கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல், செய்யும் பாவத்திற்கான தண்டனையை, சிலர் உடனடியாக அனுபவிக்க தொடங்குவதை நம் கண் முன்னால் பார்த்து வருகிறோம்.

  சில நாட்களுக்கு முன்பாக கோவையில் சுற்றுச்சுவர் ஏறி குதித்து, வீட்டிற்குள் திருட முற்பட்ட திருடனை, பல மணி நேரம் அசையவிடாமல் சிப்பிப்பாறை நாய் ஒன்று ஒரே இடத்தில் அமர வைத்திருந்த செய்தியை நாம் படித்திருப்போம்.அதாவது. கர்ம வினை உடனுக்குடன் வேலை செய்து பாவங்களுக்கான தண்டனை கிடைக்கிறது என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

  குறிப்பாக சாலையில் சென்று கொண்டிருப்பவர்களிடம் செயின் அல்லது மொபைல் ஃபோன்களை பறித்துச் செல்லும் கொள்ளையர்கள் சிலர் சில அடி தூரத்திற்கு உள்ளாக வாகனத்தில் இருந்து சறுக்கி விழுவது அல்லது தடுக்கி விழுவது போன்ற சம்பவங்களையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி ஒரு நிகழ்வு தான் சமூக வலைதளங்களில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

  Read More : “என்ன வித்தயா காட்டுறீங்க“.? வெயிட்டர் இப்படித்தான் டஜன் கணக்கில் தட்டுக்களை சுமந்து செல்ல வேண்டுமோ.? வைரல் வீடியோ


  ஆனால், இந்த சம்பவத்தில் என்ன விசேஷம் என்றால் பொதுவாக கொள்ளையர்கள் பணம், நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை தான் கொள்ளையடித்துச் செல்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த வீடியோவில் வரும் பெண்மணியோ சாலையோரமாக வைக்கப்பட்டிருந்த அழகுச் செடியை கொள்ளை அடித்து செல்ல முயற்சி செய்து மாட்டிக் கொண்டுள்ளார்.

  ப்ரொபஷனல் திருடர்கள் எப்போதும் விலை மதிப்புள்ள0 பொருட்களை தான் திருடுவார்கள். ஆனால், அழகான எந்த பொருளை பார்த்தாலும், உடனே அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள விளையும் சில இன்ஸ்டன்ட் திருடர்கள் இப்படித்தான் சின்ன சின்ன பொருட்களை களவு செய்ய முற்பட்டு மாட்டிக் கொள்கின்றனர்.

  சாலையோரத்தில் உள்ள அழகு செடி தனது மனதை கவர்ந்த நிலையில் அதனை எடுத்துக் கொண்டு செல்ல முடிவு செய்த இந்தப் பெண், ஸ்கூட்டரை ரன்னிங்கில் வைத்துக் கொண்டே செடியை எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார்.அப்போது எதிர்பாராத விதமாக ஆக்சிலேட்டர் ரேஸ் ஆகிவிட இந்த பெண் வண்டியோடு இழுத்து செல்லப்பட்டு சாலை நடுவே விழுந்து விட்டார்.   
  View this post on Instagram

   

  A post shared by memes comedy (@ghantaa)


   

  இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ தான் தற்போது வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 2.2 மில்லியன் மக்கள் இதனை பார்வையிட்டுள்ளனர். செய்த தவறுக்கான தண்டனை உடனடியாக கிடைத்துவிட்டது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். கொஞ்சம் பணம் செலவழித்தாலே இதை வாங்கிவிட முடியும் என்ற நிலையில், இதையெல்லாம் திருடுகின்ற அளவுக்கு சில்லறை புத்தி உடையவராக அந்தப் பெண் இருந்துள்ளார் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral Video

  அடுத்த செய்தி