பிரபல அமெரிக்க டிவி நிகழ்ச்சியில் தமிழ் பாடலுக்கு ’மரண மாஸ்‘ நடனம்...! வீடியோ

பிரபல அமெரிக்க டிவி நிகழ்ச்சியில் தமிழ் பாடலுக்கு ’மரண மாஸ்‘ நடனம்...! வீடியோ
  • News18
  • Last Updated: February 13, 2020, 10:44 AM IST
  • Share this:
அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ் பாடலுக்கு நடனமாடிய இளைஞர்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

அமெரிக்காவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான America's got talent என்ற நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு சாதனையாளர்கள் பங்கேற்று வருகின்றனர். நடனமாடுவது, பாடுவது, மாயா ஜால தந்திரங்கள் செய்வது என பல்வேறு வியக்கவைக்கும் திறமைகளை இந்த மேடையில் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை மிகப் பெரிய கௌரவமாக கருதும் கலைஞர்கள் இதற்காக பல கடுமையான போட்டிகளையும் கடந்து இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இந்த நிலையில் அண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த we unbeatable என்ற நடன குழு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலுக்கு அசத்தலாக நடனத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அரங்கில் இருந்தவர்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களும் we unbeatable நடன குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சியில் we unbeatable பங்கேற்ற காட்சிகளையும் இணையதளத்தில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வடமாநிலங்களில் இருந்து பணிக்காக வெளியேறி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவரும் ஊழியர்களைக் கொண்டு இந்த we unbeatable என்ற நடன குழு நடத்தப்பட்டு வருகிறது.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading