ஆற்றில் மூழ்கயிருந்த மான் குட்டியை நாய் ஒன்று காப்பாற்றி கரை சேர்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் ஆற்றின் ஒரு கரையில் மான் குட்டி ஒன்றினை காப்பாற்றிக் கொண்டு நாய் ஒன்று மறு கரை நோக்கி திரும்பி வருகின்றது. தனது வாயில் மான் குட்டியினை கவ்வியவாறு நீரில் நீந்தி வரும் நாயின் செயலுக்கு பலரும் கமெண்ட்சில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Dog saves baby deer from Drowning.
A lesson...!#ViralVideo pic.twitter.com/FisXAMJmhc
— Atul (@ImAtul1419) January 20, 2022
இதே போன்று சமீபத்தில் குரங்கு ஒன்று தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் பயன்படுத்தி பூனை குட்டியை காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் சேறும், சகதியுமாக உள்ள குப்பை தொட்டியில் பூனை குட்டி ஒன்று விழுந்து தன்னால் எழ முடியாமல் அதன் உள்ளே சிக்கி தவித்துக் கொண்டு உள்ளது. பூனை குட்டியின் சப்தம் கேட்டு குரங்கு ஒன்று குப்பை தொட்டியை எட்டி பார்க்க உள்ளே பூனைக்குட்டி வெளியில் செல்ல வழி இல்லாமல் செய்வதறியாது உள்ளேயே கிடந்துள்ளது. பூனைக் குட்டியை காப்பாற்றும் நோக்கில் குரங்கு சகதியான குப்பை தொட்டிக்குள் உடனே இறங்கி தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது.
எனினும் பூனை குட்டியை காப்பாற்ற தன்னால் முடியாது என்பதை அறிந்த குரங்கு குப்பை தொட்டியில் இருந்து வெளியில் வந்து பூனை குட்டியை காப்பாற்ற சிறுமி ஒருவரிடம் உதவி கேட்கின்றது. குரங்கின் மொழியை புரிந்து கொண்ட சிறுமி உடனே குப்பை தொட்டியில் இறங்கி பூனை குட்டியை காப்பாற்றி குரங்கின் கைகளில் ஒப்படைக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் மனங்களையும் வென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending, Viral Video