தனது எஜமானரை காப்பாற்ற தனது உயிரை கொடுத்த நாய் - கேரளாவில் நடந்த சோகம்

தனது எஜமானரை காப்பாற்ற தனது உயிரை கொடுத்த நாய் - கேரளாவில் நடந்த சோகம்

மாதிரி படம்

அஜய் எங்கு சென்றாலும் அவருடன் அவரது செல்ல நாயான அப்புவும் உடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

 • Share this:
  கேரளாவில் அப்பு என்ற செல்ல நாய் தனது எஜமானர் உயிரை காப்பாற்ற தனது உயிரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பொதுவாக நாய்கள் விசுவாசம் மற்றும் நெருங்கி பழகும் குணம் கொண்டது என பலரக்கும் தெரியும். இந்த செல்லப்பிராணிகள் தன்னலமற்றவை என்பதற்கு சான்றாக கேரளாவின் கோட்டயத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு செல்ல நாய், அதன் உரிமையாளரை பாதுகாக்க தனது உயிரை கூட பொருட்படுத்தாமல் மின்சார கம்பியை கடித்து இறந்துள்ளது.

  கோட்டயம் மாவட்டத்தின் வஜூரில் புதன்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பு என்ற செல்ல நாய் தனது வழக்கமான காலை நடைப்பயணத்தில் தனது எஜமானர் அஜய் மற்றும் அவரது 5 வயது மகனுடன் நடந்து சென்றது. பால் வாங்குவதற்காக சென்ற எஜமானர் நாயையும் உடன் அழைத்துச் சென்றார்.

  டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, அஜய் சமீபத்தில் ஒரு விபத்தை சந்தித்து மெதுவாக குணமடைந்து வந்தார். விபத்து நடந்ததிலிருந்து அஜய் எங்கு சென்றாலும் அவருடன் அவரது செல்ல நாயான அப்புவும் உடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. சம்பவம் நடந்த அன்றும் அவ்வாறே எஜமானுடன் நடந்து சென்றுள்ளது.  அப்போது வழியில் மின்சார கம்பி இருப்பதை கவனித்தது. அந்த கம்பியை அப்பு கடந்து சென்றாலும், தனது உரிமையாளரின் வழியிலிருந்து நகர்த்த முற்பட்டு கம்பியை  அந்த நாய் அதன் வாயில் எடுத்துள்ளது. உடனடியாக நாய் மீது மின்சாரம் பாய்ந்து உரிமையாளர் அஜய்யின் கண்களுக்கு முன்னால் உயிரிழந்தது.

  இதை பார்த்த அஜய் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அப்பு அதன் உரிமையாளரான அஜய் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
  Published by:Vijay R
  First published: