என்னென்ன செய்றான் பாருங்க.... நடனம் ஆடி ரசிகர்களை சேர்க்கும் நாய்... - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

முகநூலில் நாய் ஒன்று நடனம் ஆடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது.

  • Share this:
சோசியல் மீடியாக்களின் வருகைக்குப் பிறகு மக்கள் சின்ன சின்ன விஷயங்களையும் ரசிக்கத் துவங்கியுள்ளனர். மேலும் குழந்தைகள், செல்லப் பிராணிகளின் கியூட்டான விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் சில வீடியோக்கள் வைரலாகி, செய்திகளிலும் இடம் பெற்று வருகின்றன. அப்படி ஒரு நாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முகநூலில் நாய் ஒன்று நடனம் ஆடுவது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. 543K பார்வையாளர்கள் மற்றும் 792 பேர் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் பெண் ஒருவர் நடனம் ஆடுகின்றாள். அவள் பின்னரே அவள் வளர்த்து வரும் நாய் குட்டியும் அவள் அசைவிற்கு ஏற்ற வாறு கைகளை அங்கும் இங்கும் ஆட்டி ஆட்டி ஆடுகின்றது.

பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பதாக இணையத்தில் இந்த வீடியோ அதிகம் பகிரப்படுகிறது. இருப்பினும் நாயின் கழுத்து கட்டி இருப்பதால் தயவு செய்து நாயினை துன்புறுத்தாதீர்கள் என அதனை கயிற்றை அவிழ்த்து விட்டு ஆட விடுங்கள் என விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் இணையவாசிகள் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.





சமீபத்தில் இதே போன்று Mary & Secret என்ற இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்ட நாயின் வீடியோ வைரலானது. மேரி என்ற பெண்ணும் அவரது செல்ல பிராணியான சீக்ரெட் என்ற பெயருடைய ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் ரக நாயும் இணைந்து துணிகளை சலவை செய்யும் பணியில் ஈடுபடுவதை இணையவாசிகள் பலரும் ஷேர் செய்திருந்தனர்.



மேரியின் செல்ல பிராணியான சீக்ரெட் தனது மனித நண்பருக்கு சலவை செய்வதில் உதவுவதை அந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. இது தொடர்பாக மேரி ஷேர் செய்துள்ள வீடியோவில் மேரியும் நாயும் சேர்ந்து சலவை செய்வதை காணலாம்.



 




View this post on Instagram





 

A post shared by Mary & Secret (@my_aussie_gal)






இருவரும் தனித்தனி லாண்டரி மெஷின்களின் முன் நிற்கின்றனர். நாய் வாஷ் செய்யப்பட்ட துணிகளை கூடையில் எடுத்து போடுகிறது. மெஷினில் துணிகளை போட்டு விட்டு டோரை மூடும் மேரியை பார்த்து நாயும் தன் பக்கம் இருக்கும் மெஷினின் டோரை அழகாக மூடுகிறது.



 




View this post on Instagram





 

A post shared by Mary & Secret (@my_aussie_gal)






பின்னர் மேரி தன் வலது கையை நீட்ட, நாய் உற்சாகமாக மேலெழும்பி தன் முன்னங்காலால் சீயர்ஸ் செய்கிறது. பின்னர் துவைத்த துணிகளை தனித்தனி ரேக்குகளில் அடுக்கி வைப்பதற்கும் மிக அழகாக மேரிக்கு உதவுகிறது அவரது செல்ல பிராணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: