முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / Personality Test: நடக்குற ஸ்டைலை வைத்தே உங்களோட ஆளுமையை அறிந்துகொள்ளலாம்.! 

Personality Test: நடக்குற ஸ்டைலை வைத்தே உங்களோட ஆளுமையை அறிந்துகொள்ளலாம்.! 

Walking Style

Walking Style

Personality Test | நீங்கள் நடக்கும் ஸ்டைல் உங்கள் ஆளுமை வகையை வெளிப்படுத்தும். வேகம் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவை நமது ஆளுமைகளைப் பற்றிய பல முக்கியமான பண்புகளை சொல்ல முடியும் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

ஒருவரது ஆளுமை பண்புகளை அவர்களுடைய பல வகையான விஷயங்களை வைத்து கண்டுகொள்ளலாம் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நீங்கள் எப்படி நடக்கிறீர்கள் என்பதை வைத்து உங்களுடைய ஆளுமை பண்புகளை அறிந்துகொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நீங்கள் வேகமாக நடப்பவரா, மெதுவாக நடப்பவரா, போன்றவற்றை வைத்து பல முக்கியமான பண்புகளை சொல்ல முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

நடைபயிற்சி ஆளுமை வகைகள்: நீங்கள் நடக்கும் ஸ்டைல் உங்கள் ஆளுமை வகையை வெளிப்படுத்தும். வேகம் மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவை நமது ஆளுமைகளைப் பற்றிய பல முக்கியமான பண்புகளை சொல்ல முடியும் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

நடைபயிற்சி பாணி மூலமாக ஆளுமை வகையை வெளிப்படுத்துவதற்கான ஆரம்பகால ஆய்வுகளில் ஒன்று 1935 இல் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் வெர்னர் வோல்ஃப் என்பவரால் வெளியிடப்பட்டது. பல ஆண்டுகளாக, நடைப் பாணிகள் பற்றிய பல ஆய்வுகள், அவர்களின் நடைப் பாணியை எப்படி மாற்றுவது அல்லது அவர்கள் தரும் உணர்வை மாற்ற வேறு நடைப் பாணியை மாற்றியமைப்பது எப்படி என்பதை அறிவித்துள்ளன. அவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு, உங்கள் நடைப்பயிற்சி வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

1. நீங்கள் வேகமாக நடப்பவராக இருந்தால்:

இந்த வகை நடையைக் கொண்டவர்கள் விடாமுயற்சி மற்றும் வெளிப்படையாக பேசக்கூடிய நபர்களாக இருப்பார்கள். வேகமாக நடக்கக்கூடிய ஆளுமை கொண்டவர்கள் புதிய அனுபவங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும், பொதுவான மனநிலை மற்றும் மனசாட்சியுடனும் இருப்பார்கள். வேகமாக நடந்து செல்பவர்கள், செல்வந்தர்களாகவும், ரிஸ்க் எடுக்க தயங்காதவர்களாகவும் காணப்படுவார்கள். பிறரை விட எதையும் முன் மாதிரியாக செய்வதில் இவர்களுக்கு வழக்கத்தை விட அதிக தைரியம் இருக்கும். இத்தகைய நடைப்பயிற்சி பாணியைக் கொண்டவர்கள் விரைவான ஆற்றல் மற்றும் விவரங்களுக்கு மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள்.

Also Read : மனித முகத்தில் மறைந்திருக்கும் வார்த்தையை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்!

2. நீங்கள் மெதுவாக நடப்பவராக இருந்தால்:

மெதுவாக நடக்கூடிய நபர்கள் எச்சரிக்கையானவர்கள். இவர்களது முன்னேற்றமும் மெதுவாக மற்றும் குறுகியதாக இருக்கும். இவர்கள் எதையும் விரைவில் வெளிப்படுத்தமாட்டார்கள். மெதுவாக நடக்கும் குணம் கொண்டவர்கள் பொதுவாக தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்வார்கள், மேலும் சுயநலம் கொண்டவர்கள்.

வழக்கமாக, இந்த நடைப்பயிற்சி பாணியைக் கொண்டவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தில் இருக்கும்போது நிதானமாகவும் திருப்தியுடனும் காணப்படுவார்கள். அவர்கள் பொதுவாக கூட்டம் நிறைந்த கூட்டத்திற்குள் செல்ல விரும்ப மாட்டார்கள், அங்கிருந்து விலகிச்செல்ல நினைப்பார்கள். இவர்களது வாழ்க்கை முறையிலும் சுமாரான சுறுசுறுப்பு உள்ள நபராக மட்டுமே இருப்பார்கள். மெதுவாக நடக்கும் பழக்கம் ஆரம்பகால உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கலாம் அல்லது வயதாகும்போது அவர்களின் நரம்பியல் செயல்பாடு மெதுவாக இருப்பதால் விபத்துகளுக்கு ஆளாகக்கூடும்.

3. நீங்கள் நிதானமாக நடப்பவராக இருந்தால்:

உங்கள் நடையை வைத்து பார்த்தால், இந்த வகை நபர்கள் வாழ்க்கையில் தங்களுக்கான சொந்த விதிமுறைகளை பயன்படுத்தி முன்னேற நினைப்பார்கள். இவர்கள் எதிலும் அவசரப்பட மாட்டார்கள். எப்போதும் நிதானமாகவும், திருப்தியுடனும், நம்பிக்கையுடனும் இருப்பார்கள். நீங்கள் மக்களுடன் தொடர்புகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறீர்கள் மற்றும் அவர்களின் உரையாடல்கள் அல்லது கருத்துக்களை கேட்கக்கூடியவர். உங்கள் தலையை உயர்த்திக் கொண்டு தெருவில் நடந்து செல்வீர்கள். நிதானமாக நடப்பவர் தன்னம்பிக்கையில் உயர்ந்தவராகவும், அவசரம் குறைந்தவராகவும் அறியப்படுகிறார். அவர்கள் எதிலும் சரிபார்ப்பு அல்லது உத்தரவாதம் தேடுவதில்லை.

Also Read : உங்க கண்களுக்கு 'M' தெரிகிறதா ? முடிந்தால் கண்டுபிடியுங்கள் பாக்கலாம்..

4. பெரிய அடியை எடுத்து வைத்து விரைவாக நடப்பவராக இருந்தால்:

நீங்கள் ஒரு போட்டி மற்றும் உக்கிரமான ஆளுமை வகையைக் கொண்டவர். இவர்கள் மிகவும் தர்க்கரீதியான, அறிவார்ந்த மற்றும் ஆக்கப்பூர்வமான நபர். தனிப்பட்ட வாழ்க்கையில் கூலான நபராக இருப்பார்கள். இந்த வகை நபர்கள், நம்பிக்கையானவர் எனவே நடந்து கொண்டே பேசினாலும், உடன் வருபவரின் கண்களை பார்த்து நேர்ப்பட பேசுவார்கள். நீண்ட விரைவான நடைப் பாணியைக் கொண்டவர்கள் மல்டி டாஸ்கில் திறமையானவர்கள். இவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும், அவர்களது தரத்தை நிறைவு செய்ய வேண்டும் என முயற்சிப்பார்கள்.

Also Read : உட்காரும் ஸ்டைலை வைத்தே உங்களின் ஆளுமை பண்புகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!

5. கால்களை இழுத்து வைத்து நடப்பவராக இருந்தால்:

உங்கள் நடையின் ஆளுமை வகை நீங்கள் ஆர்வமுள்ள அல்லது மிகவும் கவலைப்படக்கூடிய நபர் என்பதை வெளிப்படுத்துகிறது. ஒரு நபர் நடக்கும்போது கால்களை இழுத்தால் என்ன அர்த்தம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகளின் கூற்றின் படி, இதுபோன்று நடப்பவர்கள் தங்களை தாங்களே சோகத்தில் மூழ்கடித்துக் கொள்ளக்கூடியவர்கள் எனக்குறிப்பிட்டப்பட்டுள்ளது. இவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வதை விட கடந்த கால சோகத்தை நினைத்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் அல்லது அன்றாடப் பணிகளில் அவர்களுக்கு ஆற்றலும் உற்சாகமும் இல்லை. காரியங்களைச் செய்வது அல்லது பிரச்சினைகளைத் தீர்ப்பது இவர்களால் முடியாது. அவர்கள் பொதுவாக மந்தமானவர்களாகவோ அல்லது செல்லக்கூடிய மனப்பான்மை இல்லாதவர்களாகவோ காணப்படுகின்றனர்.

First published:

Tags: Personality Test, Trending, Walking