ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உங்கள் மூக்கின் வடிவத்தின் வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்

உங்கள் மூக்கின் வடிவத்தின் வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்

9 வகையான மூக்கின் வடிவம்

9 வகையான மூக்கின் வடிவம்

கீழுள்ள புகைப்படங்களில் ஒன்பது வடிவ மூக்குகள் உள்ளன. இதில் உங்களுடைய மூக்கு எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை பார்த்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

  • Trending Desk
  • 5 minute read
  • Last Updated :

ஒரு நபரின் ஆளுமைத் திறனை எதையெல்லாம் வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு பல அளவீடுகள் இருக்கின்றன. ஒரு நபரின் பெர்சனாலிட்டி எப்படி இருக்கும் என்பது பற்றி சமீபத்திய ட்ரெண்டாக இருக்கும் ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களின் மூலம் ஒரு பக்கம் தெரிந்து கொண்டாலும், ஒருவருடைய தோற்றம், உருவத்தில் சில அமைப்புகள் உள்ளிட்ட பல விஷயங்களை வைத்தும் எளிதில் தெரிந்து கொள்ள முடியுமாம். அந்த வரிசையில், ஒருவர் மூக்கு எந்த வடிவத்தில் இருக்கும் என்பதை வைத்து அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம்.

முக அமைப்புகள் மற்றும் முகபாவங்களை வைத்தே ஒரு நபரின் குணங்களை கண்டு பிடிக்கும் பழக்கம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டதாகும். பேஸ் ரீடிங் நிபுணர் மற்றும் எழுத்தாளரான ஜீன் ஹேனர் ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று எழுதியிருக்கிறார். ஒரு நபர் எப்படிப்பட்ட பெற்றோராக இருப்பார், அவருடைய காதல் மற்றும் ரொமாண்டிக் உறவுகளில் எப்படி நடந்து கொள்வார், அவருக்கு விருப்பமானது எது, பொது இடங்களில் அவர் எப்படி பழகுவார் என்பது பற்றி அனைத்து விவரங்களையும் விளக்கியுள்ளார்.

ஒரு சில நாடுகளில், வலிமையான ஆளுமைக் கொண்டவர்கள் என்று அறியப்பட்டவர்களில் இது போன்ற பிரத்தியேகமான மூக்கு வடிவம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். உங்கள் குடும்பத்தில், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று தேடினால் கூட குறிப்பிட்ட மூக்கு வகை கொண்டவர்களின் பெர்சனாலிட்டி ஒரே மாதிரி காணப்படும். கீழேயுள்ள புகைப்படத்தில், ஒன்பது வடிவ மூக்குகளின் படங்கள் கொடுக்கப்பட்டுஉள்ளன. இதில் உங்களுடைய மூக்கு எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை பார்த்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பது வடிவ மூக்குகள்

1. ரோமானிய மூக்கு: உங்களுக்கு ரோமானிய மூக்கு இருக்கிறது என்றால் உங்களுடைய ஆளுமைத்தன்மை மிகவும் ஸ்ட்ராங்கானது. உங்கள் வாழ்க்கையில் நிறைய குறிக்கோள்கள் இருக்கும். அது மட்டுமின்றி உங்களை பலரும் பின்பற்றுவார்கள். சவால்களை எதிர்கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் மிகச் சிறந்த தலைவராக இருப்பீர்கள். மத்திய வயதில் நீங்கள் பேரும் புகழும் பெறுவீர்கள். மற்றவர்களை கட்டுப்படுத்த வேண்டும், எல்லாவற்றையும் உங்கள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு இருக்கும். ஆனால், பலரும் கவனிக்கத் தவறும் ஒரு விஷயத்தை நீங்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள். அவ்வளவு சுலபமாக முடிவு எடுக்க மாட்டீர்கள்.

2. நூபியன் மூக்கு: உங்களுக்கு நூபியன் மூக்கு இருந்தால் நீங்கள் எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனித்து தெரிவீர்கள். உதாரணம் அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் பராக் ஒபாமா! நீங்கள் வெளிப்படையான மனது கொண்டவர், எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டுபவர், பிரச்சனைக்கு யாரும் எதிர்பாராத கண்ணோட்டத்திலிருந்து நீங்கள் தீர்வை சொல்வீர்கள். உங்களுடைய தோற்றம் அட்ராக்டிவாக இருக்கும். நீங்கள் சில நேரங்களில் அதீதமாக உணர்ச்சிபூர்வமாகவும் இருப்பீர்கள். தொலைநோக்கு பார்வை உங்களிடம் இருந்தாலும் நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது நிதானம் இழப்பெர்கள். ஏதாவது ஒரு விஷயத்தை தொடங்குவது உங்களுக்கு கொஞ்சம் சிக்கலான இருக்கும், தயக்கத்தை விட்டு நீங்கள் தைரியமாக முன்னேறலாம்.

3. நேரான மூக்கு: கிரேக்கியர்களுக்கு இருப்பதைப் போல உங்கள் மூக்கு நேராக இருந்தால் நீங்கள் தெளிவாக சிந்திக்க கூடியவர், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர், பொறுமை, எளிமை, நேர்மை மற்றும் ஒரு விஷயத்தை கடைபிடிக்கவேண்டும் என்றால் அது எந்த விதிமுறைகளையும் மீறாமல் அதை அப்படியே பின்பற்றும் தன்மை கொண்டவர். இந்த குணங்கள் அனைத்துமே பலருக்கும் உங்கள் மீது பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தும். நீங்கள் நேசிக்கும் நபர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயங்க மாட்டீர்கள். யாருடைய நம்பிக்கையையும் நீங்கள் உடைக்கமாட்டீர்கள். நீங்கள் எவ்வளவு தெளிவாக சிந்தித்தாலும் பேசினாலும் உங்களை விட வேறு யாரேனும் ஏதேனும் ஒரு விஷயத்தில் சிறந்தவராகக் காணப்பட்டால் அதனால் நீங்கள் எளிதாக பாதிப்படைவீர்கள். எனவே நீங்கள் அமைதியான நபர் என்று உங்களை வெளிப்படுத்திக் கொள்வீர்கள். இந்த வகை மூன்று இருக்கும் நபர்கள் பெரும்பாலும் மீடியா மாடலிங் மற்றும் கலை சம்பந்தப்பட்ட தொழில் துறையில் பெரிய அளவுக்கு வெற்றி அடைவார்கள்.

4. கோணலான மூக்கு: மூக்கு ஏதோ ஒரு பகுதியில் கோணலாக அமைந்திருந்தால், நீங்கள் மிகவும் எளிமையான மற்றும் நேரடியான நபர் என்று கருதப்படுவீர்கள். மூக்கு தான் கோணலே தவிர, இவர்களின் ஸ்ட்ராங்கான பெர்சனாலிட்டி கொண்டவர்கள் மற்றும் தாராள மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அது மட்டுமில்லாமல் எல்லா விஷயத்தையும் கூர்ந்து கவனிப்பார்கள். பல விஷயங்களையும் ஆழமாக சிந்தித்து புரிந்து கொள்ளும் திறன் இருப்பதாலேயே பெரும்பாலான நேரத்தில் கடினமான விஷயங்களை எடுத்து தீர்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். வாழ்வில் எளிமையான விஷயத்தின் மீது ஈர்ப்பு இருக்கும். எனவே காம்ப்ளிகேடட் ஆன, காம்ப்ளக்ஸ் ஆன உரையாடல் மற்றும் எந்த விஷயங்களிலிருந்தும் விலகி இருப்பது நல்லது.

5. உருண்டை மூக்கு: உங்கள் மூக்கு உருண்டையாக காணப்பட்டால் நீங்கள் வேகமாக சிந்திப்பவர், புத்திசாலி, ஸ்ட்ரீட் ஸ்மார்ட், மிகவும் சென்சிட்டிவான நபர் மற்றும் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருப்பவர். உங்களைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் மட்டுமே உங்களுடைய உணர்ச்சிபூர்வமான மற்றும் கனிவான பக்கத்தை பார்க்க முடியும். நீங்கள் எந்த வித சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். எப்படி நீங்கள் எப்படி இவ்வளவு வேகமாக சிந்தித்து செயல்படுகிறீர்கள் என்பது பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். ஆனால் பல நேரங்களில் நீங்கள் அதீதமான மனநிலை கொண்டவர் மற்றும் அக்ரஸிவ்வாக நடப்பவர் என்றே வெளிப்படும்.

6. பட்டன் மூக்கு: பட்டன் மூக்கு (celestial) மிகவும் கியூட்டான மூக்கு வடிவமாகும். எனவே, உங்கள் தோற்றம் கியூட்டாக, மற்றவரை எளிதில் கவரும் வண்ணம் இருக்கும். ஆனால் உங்களிடம் கியூட்நஸ் மட்டும் தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. உங்களிடம் தீவிரமான மன உறுதி இருப்பதால், ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் நினைத்தால் அதை நிறைவேற்றி விட்டுத்தான் அடுத்ததைப் பார்ப்பீர்கள். வாழ்வின் மீது உங்களுக்கு பாசிட்டிவான எண்ணங்கள் மட்டுமே உள்ளது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்பவர்களில் ஒருவர். உங்கள் நேரத்தையும் முயற்சியையும் சரியான விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டும். பலர் சொல்வதைக் கேட்டாலும் உங்கள் உள்ளுணர்வு சொல்வதைத்தான் நீங்கள் பின்பற்றுவீர்கள்.

Also Read... மச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

7. கூரான மூக்கு: மூக்கு ரொம்ப ஷார்ப்பா இருக்கு என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அப்படி கூரான மூக்கு கொண்டவர்கள், சுதந்திர மனப்பான்மை, கொண்டவர் தலைமை பண்பும் இருக்கும். அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஏற்படும் உள்ளுணர்வு துல்லியமாக இருக்கும். வாய்ப்புகளை கண்டுபிடிப்பதில் புலன்களும் சார்பாக இருக்கும். ஆன்மிக ரீதியான பல விஷயங்களில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கும். பொதுவான வழியைப் பின்பற்றாமல் வாழ்க்கையில் உங்களுக்கென்று பாதையை உருவாக்கிக் கொண்டு வெற்றி பெற முயற்சி செய்வீர்கள். மற்றவர்கள் உங்களை பார்த்தாலே அவர்களுக்கு அந்த எனர்ஜி தொற்றிக் கொள்ளும் அளவுக்கு உங்கள் தன்னம்பிக்கை அதிக அளவுக்கு இருக்கும். ஆனால் சில நேரங்களில் நீங்கள் அதிக பிடிவாதம் கொண்டவராக வெளிப்படுவீர்கள்.

8. குட்டி மூக்கு (மேற்புறமாக வளைந்திருக்கும்)

உங்கள் மூக்கு சிறிய அளவில் இருந்து உங்களுடைய மூக்கின் நுனி மேல் பக்கம் வளைந்தவாறு காணப்பட்டால் நீங்கள் மிகச் சிறந்த டீம் பிளேயர். நீங்கள் கூட்டாக மட்டுமல்லாமல் மிகவும் மகிழ்ச்சியான, சியர்ஃபுள் பர்சனாலிட்டி கொண்டவராகவும் அதிக அன்பும் பாசமும் காட்டும் நபராகவும் பலராலும் அறியப்படுவீர்கள். உங்களுடைய படைப்பாற்றலை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை மட்டும் தான் செய்வீர்கள் அதை முடித்த பிறகு தான் அடுத்த விஷயத்திற்கு செல்வீர்கள். நீங்கள் பெரும்பாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதால் சில முக்கியமான விஷயங்களை தவற விட்டுவிடுவீர்கள்.

9. பெரிய மூக்கு: பெரிய மூக்கு மற்றும் பெரிய நாசி துவாரம் கொண்டவர்கள் தங்களுக்கென்று ஒரு சிந்தனையுடன் வாழ்பவர்கள். மற்றவர்களிடமிருந்து எந்த கட்டளையும் பெற மாட்டார்கள் தங்களுக்கு பிடித்ததை மட்டும் தான் செய்வார்கள். ஒரு பாஸ் ஆட்டிட்யூட் இவர்களிடம் இருக்கும். ஒரு குழுவில் இருக்கும்போது தன் மீது கவனம் இருக்க வேண்டுமென்று துணிச்சலாக சட்டென்று எதையாவது செய்யும் குணம் கொண்டவர்கள். பெரிய மூக்கு என்பது அதிகாரம், மற்றவர்களை கட்டுப்பாட்டில் வைப்பது, ஈகோ, சுதந்திரம் மற்றும் தலைமை பண்பு ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. பிறப்பிலேயே தலைமைத்துவ குணங்கள் கொண்ட நபராக இவர்கள் இருந்திருப்பார்கள்.

ஒரே மாதிரியாக மாற்றம் இல்லாமல் வேலை செய்வது இவர்களுக்கு போர் அடித்துவிடும். ஏனோ தானோ என்று வேலை செய்வது பிடிக்காது. செய்யும் வேலையை எந்த பிழையும் இல்லாமல் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். பலரும் இவர்களிடம் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு வருவார்கள். ஒரு ராயல் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாகவே இருக்கும்.

First published:

Tags: Nose, Personality Test