ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இதில் உங்களுக்கு பிடித்த பானம் எதுவென்று சொல்லுங்கள்.! உங்களின் ஆளுமை பற்றி நாங்கள் சொல்கிறோம்

இதில் உங்களுக்கு பிடித்த பானம் எதுவென்று சொல்லுங்கள்.! உங்களின் ஆளுமை பற்றி நாங்கள் சொல்கிறோம்

பெர்ஸ்னாலிடி டெஸ்ட்

பெர்ஸ்னாலிடி டெஸ்ட்

காஃபி, டீ, கிரீன் டீ என நாம் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பானங்கள் பல உள்ளன. நீங்கள் காஃபி அல்லது டீ-யை மிகவும் விரும்பி குடிப்பீர்களா.! அல்லது கிரீன் டீ தான் உங்களுக்கு பிடிக்குமா.! ஏனென்றால் இதில் உங்களுக்கு பிடித்த பானம் உங்களின் உண்மையான ஆளுமை பண்புகளை வெளிப்படுத்துகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தினமும் காலை எழுந்தவுடன் சூடாக பானம் எதாவது குடித்தால் தான் நமது நாள் சுறுசுறுப்பாக செல்லும். காலை எழுந்தவுடன் மட்டுமல்லாமல் அலுவலகம் மற்றும் வேலைகளுக்கு இடையே பிரேக் எடுத்து கொண்டு நாம் குடிக்கும் சூடான பானம் நம்மை சோர்வடையாமல் செய்கிறது.

காஃபி, டீ, கிரீன் டீ என நாம் ஒவ்வொருவருக்கும் பிடித்தமான பானங்கள் பல உள்ளன. நீங்கள் காஃபி அல்லது டீ-யை மிகவும் விரும்பி குடிப்பீர்களா.! அல்லது கிரீன் டீ தான் உங்களுக்கு பிடிக்குமா.! ஏனென்றால் இதில் உங்களுக்கு பிடித்த பானம் உங்களின் உண்மையான ஆளுமை பண்புகளை வெளிப்படுத்துகிறது. இங்கே மேற்கண்டதில் உங்களுக்கு பிடித்த பானத்தின் அடிப்படையில் உங்களது ஆளுமை பண்புகள் என்னவென்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிடித்த பானம் காஃபி என்றால்...

காஃபியில் பல வெரைட்டி இருக்கிறது.. உங்களுக்கு பிளாக் காஃபி மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் பொறுமையான, திறமையான மற்றும் தூய்மையான உள்ளம் கொண்ட நபராக இருப்பீர்கள். மேலும் உற்சாகம் நிறைந்த உறுதியான நபராக இருப்பீர்கள். நீங்கள் மாற்றத்தை அவ்வளவு எளிதில் ஏற்று கொள்ள மாட்டீர்கள். கேப்பச்சினோ காஃபியை விரும்பி குடிப்பவர் என்றால் நீங்கள் சூப்பர் கிரியேட்டிவ் நபராக திகழ்வீர்கள். நேர்மையான நபராகவும், சாகசத்தை விரும்புவராகவும் இருப்பீர்கள். எதிலும் துணிந்து ரிஸ்க் எடுப்பீர்கள். எஸ்பிரெசோ காஃபியை விரும்பி குடிப்பவர் என்றால் நீங்கள் வலுவான குணம் கொண்ட தைரியமான நபராக இருப்பீர்கள். லேட்டி காஃபியை விரும்பி குடிப்பவர் என்றால் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியை விரும்பும், சூழலை அட்ஜஸ்ட் செய்து செல்லும் நபராக இருப்பீர்கள்.

உங்களுக்கு பிடித்த பானம் டீ என்றால்...

நீங்கள் நல்லிணக்கம், மனஅமைதி மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல்களை விரும்புபவராக இருப்பீர்கள். குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதில் ஆர்வமாக இருப்பீர்கள். புதிய இடங்களுக்கு செல்வது மற்றும் புதிய மக்களை சந்திப்பது உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை மற்றும் வாழ்க்கை இடையே பேலன்ஸ் இருக்க முன்னுரிமை அளிப்பவராக இருப்பீர்கள். நீங்கள் மரபுகள், கலாச்சாரங்களை மதிப்பீர்கள். மனதில் தோன்றுவதை வெளிப்படுத்த தயங்க மாட்டீர்கள் மற்றும் எந்த நிலையிலும் நம்பிக்கையை இழக்க மாட்டீர்கள். சிறு சிறு விஷயங்களை கூட தவற விட கூடாது என்று நினைப்பீர்கள்.

உங்களுக்கு பிடித்த பானம் கிரீன் டீ என்றால்...

கிரீன் டீ உங்களுக்கு மிகவும் விருப்பமான பானமா.! நீங்கள் அமைதியாக இருந்தாலும் மன உறுதிமிக்கவராக காணப்படுவீர்கள். சில இடங்களில் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். உங்களுக்கு வேண்டியதை செய்ய நேரம் காலமெல்லாம் பார்க்க மாட்டீர்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பெரும்பாலும் ஆற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் உடல் மற்றும் மனரீதியாக சமநிலையை பராமரிக்க மிகவும் விரும்புவீர்கள். எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும் நீங்கள் உங்களை நோக்கி வருவது தீமை என்று தெரிந்தால் அதற்கு உங்கள் வாழ்வில் இடம் கொடுக்க மாட்டீர்கள். எதிலும் தனித்துவமாக செயல்பட்டு பிறரின் கவனத்தை உங்களை நோக்கி திசை திரும்புவீர்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Coffee, Green tea, Personality Test, Tea