ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

படத்தில் முதலில் தெரிவது எது.? உங்கள் ஆளுமை எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.!

படத்தில் முதலில் தெரிவது எது.? உங்கள் ஆளுமை எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.!

ஆப்டிகல் இல்யூசன்

ஆப்டிகல் இல்யூசன்

Personality Test | இதை பார்த்தவுடன் என்ன தெரிகிறது உங்களுக்கு? இதை வைத்து தான் உங்களது ஆளுமைத்தன்மை எப்படி? நீங்கள் எந்த மாதிரியான ஆளுமையுடன் வலம் வருகிறீர்கள் என்பதை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீங்கள் நேர்மையானவரா? போட்டித்தன்மைக் கொண்டவர்களாக? என்பதை நீங்களே இந்த ஒளியியல் மாயைப்புகைப்படத்தின் மூலம் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள் என்று சவால் விடும் வகையிலான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிறது.

இணையத்தைப் பொழுதுபோக்கு அம்சத்திற்காக ஒருபுறம் பயன்படுத்தி வந்தாலும் சில நேரங்களில் நமது மூளைக்கும், கண்களுக்கும் சவால் விடும் வகையிலான ஆப்டிகல் இல்யூசன் அதாவது ஒளியியல் மாயை புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வைரலாகிறது. ஒரு படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள் அல்லது இடத்தை எத்தனை வினாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடிக்கீறிர்கள்? இந்த புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் விஷயங்கள் என்னென்ன? என்பதையெல்லாம் 5, 10, வினாடிகள் அல்லது 1 நிமிடத்திற்குள் கண்டுபிடித்து விடுங்கள் என்றெல்லாம் நமது மூளைக்கும் கண்களுக்கும் சவால் விடும் புகைப்படங்களை நாம் இணையத்தில் பார்த்திருப்போம்.

சில நேரங்களில் நாம் எளிதாக கண்டுபிடித்துவிடுவோம். ஆனால் ஒரு சிலரால் விரைவில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கேள்விகள் அமைந்திருக்கும். இதுப்போன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையிலான சில ஒளியியல் மாயைப் புகைப்படங்கள் கடந்த சில மாதங்களாகவே இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இப்படியொரு கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றை டிக்டாக் பயனர் சார்லஸ் மெரியட் ஒரு வீடியோவாக பகிர்ந்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை நீங்களும் தற்போது காணுங்கள். பார்த்தவுடன் என்ன தெரிகிறது உங்களுக்கு? இதை வைத்து தான் உங்களது ஆளுமைத்தன்மை எப்படி? நீங்கள் எந்த மாதிரியான ஆளுமையுடன் வலம் வருகிறீர்கள் என்பதை நீங்களே அறிந்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் இந்த புகைப்படத்தை தற்போது பார்த்துவிட்டீர்களா? பார்த்தவுடன் நிச்சயம் பலருக்கு மண்டை ஓடு தான் நிச்சயம் தெரியும். கொஞ்சம் சற்று உற்றுப்பார்த்தால் தான் இரு பெண்கள் சீட்டு விளையாடுவது போன்று உங்களுக்குக் காட்சியளிக்கும். இதில் உங்களுக்கு எது முதலில் தெரிந்தது? ஒரு வேளை உங்களுக்கு மண்டை ஒடு போன்று புகைப்படம் தெரிந்திருந்தால் நீங்கள் என்ன மாதிரியான ஆளுமைப் பண்பைக் கொண்டவர்கள்? பெண்கள் சீட்டு விளையாடுவது போன்று தெரிந்தால் நீங்கள் என்ன மாதிரியான ஆளுமையைக் கொண்டுள்ளீர்கள்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

Also Read : 1970-யை சேர்ந்த இந்த படத்தில் எதிர்காலத்தில் இருந்து வந்தவர் யார்? 9 வினாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.! 

நீங்கள் ஒரு மண்டை ஓட்டைப் பார்த்திருந்தால் உங்களின் ஆளுமை:

இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படத்தில் நீங்கள் முதலில் மண்டை ஓட்டைப்பார்த்தீர்கள் என்றால் நீங்கள் நம்பகமானவர் மற்றும் நேர்மையானவர் என்று அர்த்தம். இதோடு உங்கள் நண்பர்கள் எப்போதும் உங்களை நம்பலாம். அதே சமயம் சில நேரங்களில் அவர்கள் கேட்க விரும்பாத சில விஷயங்களை அவர்களிடம் கூறுவீர்கள் என்று அர்த்தம்.

Also Read : இந்தியாவில் இந்த ஆண்டு இயற்கை பேரழிவு ஏற்படும் - வாங்கா பாபாவின் எச்சரிக்கை.!

பெண்கள் சீட்டு விளையாடுவது போல் தெரிந்தால் உங்களின் ஆளுமை:

இந்த கருப்பு வெள்ளை ஒளியியல் மாயைப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் இரு பெண்கள் அமர்ந்து சீட்டு விளையாடுவது போன்று நீங்கள் பார்க்க நேர்ந்தால், நீங்கள் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதோடு நீங்கள் மிகவும் போட்டித்தன்மையுள்ளவர் மற்றும் நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற விரும்பும் பண்பைக் கொண்டிருக்கும் ஆளுமை உங்களிடம் உள்ளது என்று அர்த்தம்.

எனவே தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகும் ஒளியியல் மாயைப்புகைப்படத்தில் என்ன உள்ளது? எனக் கண்டறிந்து உங்களின் ஆளுமைப் பண்பை நீங்களே அறிந்துக் கொள்ள முயலுங்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Personality Test, Trending