Home /News /trend /

இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது.? உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த படத்தில் நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது.? உங்கள் ஆளுமை பண்புகளை தெரிந்து கொள்ளுங்கள்!

Trending

Trending

Personality Test | பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் வரும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களில் மறைந்திருக்கும் விலங்குகள் அல்லது பொருட்களில் முதலில் நாம் கண்ணுக்கு என்ன புலப்படுகிறது என்பதை வைத்து நமது ஆளுமை பண்புகள் தீர்மானிக்கப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  இணையம் நெட்டிசன்களின் மனம் கவரும் வகையில் பல்வேறு வகையான ஆப்டிகல் இல்யூஷன்களை கொடுத்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன்கள் பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்க உதவுவதோடு, மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமைகிறது. சோசியல் மீடியாவில் வலம் வரும் ஆப்டிகல் இல்யூஷன்கள் சிலவற்றில், நாம் முதலில் எதை பார்க்கிறோம் என்பதை வைத்து நாம் எப்படிப்பட்டவர், நம் குணம் என்ன என்பதை கூட தெரிந்து கொள்ளலாம் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் வரும் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களில் மறைந்திருக்கும் விலங்குகள் அல்லது பொருட்களில் முதலில் நாம் கண்ணுக்கு என்ன புலப்படுகிறது என்பதை வைத்து நமது ஆளுமை பண்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சவாலான மற்றும் ஆளுமை பண்புகள் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஆப்டிக்கல் இல்யூஷனை தான் இன்று கொண்டு வந்துள்ளோம்.

  கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் ஒரு மரத்தை மையமாக கொண்டுள்ளது. அதில் 4 விலங்குகளின் உருவம் மறைந்துள்ளது. நீங்கள் பார்க்கும் முதல் விலங்கு எது என்பதை வைத்து உங்கள் ஆளுமை பண்புகளை வரையறுக்க முடியும். என்ன தயாரா?... புகைப்படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள். நீங்கள் முதலில் என்ன பார்த்தீர்கள்.?  கொரில்லா:

  மரத்தின் கீழ் இடதுபுறத்தில் உள்ள பெரிய நெகட்டிவ் ஸ்பேஸ், கொரில்லாவின் முக வடிவத்தில் உள்ளது. நீங்கள் முதலில் ஒரு கொரில்லாவைப் பார்த்திருந்தால், நீங்கள் நம்பிக்கை மிக்க நபர். நீங்கள் மிகவும் பகுப்பாய்வு செய்து செயலில் இறங்குபவர். நீங்கள் எப்போதுமே ஒரு சிக்கலை தீர்க்க முடிவெடுத்தால், அந்த விஷயத்தில் அதிக ஆர்வம் எடுத்துக்கொண்டு முடிந்தவரை முழு தகவல்களையும் திரட்டி ஆழமான அர்த்தத்தைக் கண்டறிய முயல்வீர்கள்.

  Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ

  பறவைகள்:

  மரத்தின் மேலே இரண்டு பறவைகள் பறப்பதை முதலில் பார்த்திருந்தால், நீங்கள் ஒரு நேர்மையான நபராக இருக்கலாம். உங்கள் அற்புதமான உள்ளுணர்வு காரணமாக குழுவின் தலைவராக திகழ்வீர்கள். பலருக்கும் ஆலோசனை கூறுவீர்கள்.  சிங்கம்

  கொரில்லாவுக்கு எதிரே, மரத்தின் இடது பக்கத்தில், சிங்கத்தின் முகம் உள்ளது. நீங்கள் முதலில் சிங்கத்தைப் பார்த்திருந்தால், நீங்கள் ஆளுமை திறன் மிக்க நபர் மற்றும் எப்போதும் அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல விரும்புபவர்.

  Also Read : 99 சதவீதம் பேர் தோல்வி... நீங்களாவது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.!

  மீன்:

  நீங்கள் இதனை முதலில் பார்க்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் மிகவும் சொற்ப அளவிலான நபர்கள் மட்டுமே மரத்தின் அடிப்பகுதியில் இரண்டு மீன்கள் தண்ணீரிலிருந்து குதிப்பதை கண்டுள்ளனர். அந்த மிகச்சிலரில் நீங்களும் ஒருவர் என்றால், நீங்கள் ஒரு லட்சியவாதி. கருணை குணத்திற்கு புகழ்பெற்றவர். இருப்பினும், சில சமயங்களில் உங்கள் உதவும் குணத்தால் மக்கள் உங்களைப் பயன்படுத்தி கொள்ள வாய்ப்புள்ளது.  இந்த சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷனில் மற்றொரு ரகசியமும் மறைந்துள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் பிட்ஸ்பர்க் மிருகக்காட்சிசாலை மற்றும் PPG மீன்வளத்தின் அதிகாரப்பூர்வ லோகோ ஆகும். மைட்டி ஆப்டிகல் இல்யூஷன்ஸ் படி, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் வசிக்கும் பாப் குக்கர்ட் இந்த லோகோ ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷனைக் கொண்டுள்ளது என்பதை முதலில் கண்டறிந்துள்ளார். அதனை மிருகக்காட்சி சாலையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள தரவுகளோடு ஒப்பிட்ட பின்னரே, இப்படியொரு விஷயம் அந்த லோகோவில் மறைந்திருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
  Published by:Selvi M
  First published:

  Tags: Optical Illusion, Trending

  அடுத்த செய்தி