இதற்கு முன் மூக்கின் ஷேப், தூங்கும் பொசிஷன், பிடித்த உணவுகள் உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் உங்களுடைய ஆளுமை பண்புகளை தெரிந்து கொண்டிருக்க கூடும். இன்று இங்கே நாம் ஒருவர் உட்காரும் ஸ்டைலை வைத்து அவருடைய ஆளுமை பண்புகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்க போகிறோம்.
நிபுணர்கள் நடத்திய நடத்தை ஆய்வுகளின் படி உட்காரும் போது நாம் கால்கள் வைத்திருக்கும் நிலை நம்முடைய ஆளுமையை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் இயல்பாக உட்காரும் போது நமது கால்களையும், பாதங்களையும் எப்படி வைக்கிறோம் என்பதை பொறுத்து நமது ஆளுமைகளை நிபுணர்கள் கணித்து கூறி உள்ளனர்.
நீங்கள் உட்காரும் ஸ்டைலை வைத்து உங்கள் ஆளுமையை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள ரெடியா.!
சிட்டிங் பொசிஷன் 1: முழங்கால்களை நேராக வைத்து கொண்டு உட்காருபவரா.? (Knees Straight)
கீழே உள்ள படத்தில் இருப்பதை போன்று உட்காருபவர் என்றால்..
முழங்கால்களை நேராக வைத்து உட்காருபவர்கள் தங்களையும் மற்றும் தங்கள் திறமைகளையும் நம்புபவர்கள். எப்போதுமே தங்களை பற்றி நேர்மறை கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள். இப்படி உட்காருபவர்கள் பொதுவாக புத்திசாலிகள், பகுத்தறிவு சிந்தனையாளர்கள் மற்றும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நேரத்தை சரியாக கடைபிடிப்பவர்கள். இவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் தாமதம் என்பதே இருக்காது. இருக்கும் இடத்தை நேர்த்தியாக மற்றும் சுத்தமாக வைத்திருப்பார்கள். நேர்மையானவர்கள் யாரை பற்றியும் பின்னால் பேச மாட்டார்கள். இவர்கள் கடினமான சூழ்நிலைகளில் கூட அமைதியாக இருக்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
Also Read : உங்க கண்களுக்கு 'M' தெரிகிறதா ? முடிந்தால் கண்டுபிடியுங்கள் பாக்கலாம்..
சிட்டிங் பொசிஷன் 2: முழங்கால்களை பிரித்து வைத்து உட்காருபவரா.? (Knees Apart)
கீழே உள்ள படத்தில் இருப்பதை போன்று உட்காருபவர் என்றால்..
மேலே உள்ளதை போல முழங்கால்களை பிரித்து உட்காருபவர்கள் தங்களை பற்றி தாங்களே உயர்வாக நினைத்து கொள்வார்கள். சுயநலம் மிக்கவர்களாக இருப்பர். கவலைக்குரிய நபராக இருக்க வாய்ப்பு உள்ளது. அதே போல முழங்கால்களை பிரித்து வைத்து உட்காருபவர்களுக்கு மிகவும் குழப்பமான மனம் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. இவர்களுக்கு கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் இருக்கும். தாங்கள் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து கொள்வார்கள் ஆனால் பொதுவாக தங்கள் வார்த்தைகளின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் சட்டென்று எதையாவது பேசி விடும் தன்மை கொண்டவர்கள். எளிதில் சலிப்பு கொள்வார்கள் மற்றும் இவர்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்பட வைக்க நிலையான தூண்டுதல்கள் தேவைப்படும். குழந்தையை கண்காணிப்பது போல இவர்களை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்.
Also Read : 4,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகம் இப்படி இருக்குமாம் - விஞ்ஞானிகளின் அசத்தல் முயற்சி!
சிட்டிங் பொசிஷன் 3: காலை குறுக்கே போட்டு உட்காருபவரா.? (Crossed Legs)
கீழே உள்ள படத்தில் இருப்பதை போன்று உட்காருபவர் என்றால்..
நீங்கள் மேலே உள்ள படத்தில் இருப்பது போல ஒரு முழங்கால் மீது உங்களது மற்றொரு காலை போட்டு அமர்பவராக இருந்தால், பெரும்பாலும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை கொண்டவராக இருப்பீர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி உட்காருபவர் மிகவும் கற்பனை சிந்தனை கொண்டவர் மற்றும் மிகவும் கனவு காண்பவர். நிஜ உலகில் இருந்து விலகி அடிக்கடி சிந்தனையில் தொலைந்து போகலாம். கலை, படைப்பாற்றல் மிக்கவர். பொதுவாக ஒரு பெரிய ஆளுமை கொண்டவர். எனினும் கால்களை குறுக்கே போட்டு உட்காருவது தற்காப்பு மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. உங்கள் பாதுகாப்பின்மையை மறைப்பதை உணர்த்தலாம். எனினும் இந்த நிலைகளில் சில மாறுபாடுகள் உள்ளன. நிதானமாக உட்கார்ந்து, உங்கள் கால்களைக் குறுக்காக வைத்து, உங்கள் பாதம் எதிரே இருக்கும் நபரின் திசையில் இருந்தால் நீங்கள் நம்பிக்கையுடன் பேசுகிறீர்கள் என்று அர்த்தம்.
Also Read : இந்தப் படத்தில் மறைந்துள்ள மீனை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா.?
சிட்டிங் பொசிஷன் 4: கணுக்கால்களை குறுக்கே வைத்து கொண்டு உட்காருபவரா.? (Ankle-Crossed)
கீழே உள்ள படத்தில் இருப்பதை போன்று உட்காருபவர் என்றால்..
கணுக்கால்களை குறுக்காக வைத்து உட்காருவது பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் பொதுவாக உட்காரும் நிலை என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இப்படி உட்கார்ந்தால் நீங்கள் ராஜ பரம்பரையினர் போன்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவீர்கள். எந்த சூழலிலும்அதிக நம்பிக்கையுடனும் நீங்கள் இருப்பதை தவிர உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் தன்னம்பிக்கையுடன் உணர வைக்கும் திறன் உங்களிடம் இருக்கும். இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள். தோற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அதே நேரம் கணுக்கால்களை குறுக்காக வைத்து கொண்டு உட்காருவது சில சந்தர்ப்பங்களில் தற்காப்பு மற்றும் பாதுகாப்பின்மையின் அறிகுறியாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Also Read : இந்த போட்டோவில் 4-வது கைக்கு உரிய நபரை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
சிட்டிங் பொசிஷன் 5: கணுக்காலை முழங்காலுக்கு மேல் வைத்து உட்காருபவரா.? (Figure Four Leg Lock)
கீழே உள்ள படத்தில் இருப்பதை போன்று உட்காருபவர் என்றால்..
நீங்கள் இந்த பொசிஷனில் உட்காருபவர் என்றால் நம்பிக்கை மற்றும் ஆதிக்க மனப்பான்மையுடன் இருப்பதை பிரதிபலிக்கிறது இப்படி அமர்வது அதிக ஆதிக்கம், நிதானம், நம்பிக்கை மற்றும் இளமையுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. உங்கள் ஆசைகளை நீங்களே நிறைவேற்றிக் கொள்வீர்கள். இலக்குகளை அடையும் வரை விவேகமாக செயல்படுவீர்கள். இப்படி உட்காருபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கென தனி இடத்தையும் தனியுரிமையையும் விரும்புகிறார்கள். நன்றாக ஆடை அணிவதற்கும், அழகாக இருப்பதிலும் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். தங்கள் கருத்தைத் தவிர வேறு எவர் கருத்தையும் ஏற்க மறுப்பார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.