ஒரு நபரின் ஆளுமை திறன், அடிப்படை பண்புகள் மற்றும் குணநலன் ஆகியவற்றை ஒரு சில விஷயங்களின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். சமீபத்தில் இணையம் முழுவதுமே வைரலாக பேசப்பட்டு வரும், பகிரப்பட்டு வரும் ஆப்டிகல் இல்யூசன் படங்களில் இவ்வகையான பர்சனாலிட்டி சோதனைகள் ஒரு அங்கமாக இருக்கின்றன. அதேபோல நீங்கள் உங்களின் ஸ்மார்ட்போனை கைகளில் எப்படி பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள், ஒரு கையால் பயன்படுத்துகிறீர்களா அல்லது எப்படி உங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் உங்களுடைய அடிப்படை பர்சனாலிட்டி என்ன என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் ஃபோனை எப்படி கையில் வைத்துக் கொள்கிறீர்கள் என்பதை விளக்கும் புகைப்படம் இங்கே உள்ளது.
கீழே உள்ள படத்தில் இருப்பது, ஒரே கையில் நீங்கள் ஃபோனை பயன்படுத்தினால், நீங்கள் சுதந்திரமான, மகிழ்ச்சியான மற்றும் உங்களின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நபர் என்பதை குறிக்கிறது. வாழ்க்கையில் நீங்கள் பெரிதாக எதைப் பற்றியும் புகாரும், குறையும் சொல்லமாட்டீர்கள். உங்கள் வாழ்வில் எது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களிடம் உள்ளது. உங்கள் மீதே அதிக நம்பிக்கை உள்ளது. உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பீர்கள்.
அதுமட்டுமின்றி தேவைப்படும் போதெல்லாம் உங்களுடைய இலக்கு, குறிக்கோள் மற்றும் லட்சியம் ஆகியவற்றை அடைவதற்கு நீங்கள் உங்களுடைய கம்பர்ட் ஸோன் விட்டு வெளியில் செல்லவும் தயாராக இருக்கிறீர்கள். உங்களுடைய இந்த பண்புகள் வணிகத்தில் வெற்றியை கொண்டு வரும். ஆனால் உறவுகளில் பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே காதல் மற்றும் உறவுகள் பொறுத்தவரை நீங்கள் கொஞ்சம் நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டியிருக்கும். ஏனென்றால் நீங்கள் கமிட்மென்ட் பற்றி கவலைப்படாமல் இருக்கிறீர்கள் என்று கூறி உங்கள் பார்ட்னர் உங்கள்மீது புகார் அளிக்கலாம்.
இரண்டாவது புகைப்படத்தில் உள்ளது போல நீங்கள் இடது கையால் போனை பற்றிக்கொண்டு மற்றொரு கையால் நீங்கள் ஸ்க்ரால் செய்பவராக இருந்தால், நீங்கள் புத்திசாலி, மற்றும் மற்றவர்கள் மீது அக்கறை கொண்டிருப்பவர், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். அதுமட்டுமின்றி அடுத்தவரின் குணநலன்களைப் பற்றி நீங்கள் எளிதாக கணித்துவிடுவீர்கள். போலி பித்தலாட்டம் ஆகியவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் எல்லாவற்றிலும் கூர்ந்து கவனிக்க வேண்டும். நீங்கள் மற்றவர்களை புரிந்து கொள்ளும் தன்மை உங்கள் உறவுகளை மேம்படுத்தும் ஆனால் இதே திறன்கள் நீங்கள் உறவுகளில் அவசரமாக சில முடிவுகளை எடுக்க வைக்கும். எனவே காதல் உறவுகள் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
நீங்கள் கீழே உள்ளது போல, இரண்டு கைகளாலும் இரண்டு கட்டை விரல்களும் பயன்படுத்தி உங்கள் ஃபோனை பயன்படுத்தினால், நீங்கள் எல்லாவற்றையும் மிக விரைவில் ஆராய்ந்து அதற்கு சரியான தீர்வுகளை கொடுக்கும் ஒரு நபராக இருப்பீர்கள். எந்த சூழ்நிலை வந்தாலும் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டீர்கள். நீங்கள் இயல்பாகவே ஒரு ஜாலியான நபர்.
விவாதங்களில் நீங்கள் மிகவும் சீரியஸாக காணப்பட்டாலும் மற்ற விஷயங்களில் மற்றும் குறிப்பாக குழந்தைகளுடன் நீங்கள் மிகவும் ஜாலியாக இருப்பீர்கள் ஆனால் இந்த பண்புகள் எதுவுமே உங்களுடைய காதல் மற்றும் உறவுக்கு சாதகமாக இருக்காது எனவே உறவுகள் விஷயத்தில் நீங்கள் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும்.
மேலே இருப்பது போல இடது கையில் போனை வைத்துக் கொண்டு ஆட்காட்டி விரலால் ஸ்க்ரோல் செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், உங்களுடைய கற்பனைத் திறனுக்கு எல்லையே கிடையாது. நீங்கள் கலைத்துறையில் மிகப்பெரிய அளவுக்கு வெற்றிபெறுவீர்கள். பொதுவாக நீங்கள் அனைவரிடமும் பழகும் தன்மை கொண்டிருந்தாலும் நீங்கள் தனிமையில் இருப்பது உங்கள் எனர்ஜியை அதிகரிக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, கொஞ்சம் வெட்கமும் பயமும் இருப்பதால், நீங்கள் கொஞ்சம் பின்தங்கி இருப்பீர்கள். உங்கள் பார்ட்னர் தான் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதை விரும்புவீர்கள். மற்றவர்களிடமிருந்து நீங்கள் வித்தியாசமாக இருப்பதை உங்கள் பார்ட்னர் எளிதாக கண்டறிய முடியும். எனவே அதுவே உங்கள் காதல் மற்றும் உறவுகளில் வெற்றியை கொடுக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.