4,000 புத்தகங்கள் உள்ள வீட்டு நூலகம் - இணையத்தில் வைரலான புகைப்படங்கள்

புத்தகங்கள்

புத்தகங்களை சேகரிப்பது நல்ல விஷயம் என தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அதனை உபயோமாக பயன்படுத்துங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 • Share this:
  நெட்டிசன் ஒருவர் பதிவிட்ட 4 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட வீட்டு நூலக புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

  புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர் என்றால், படிப்பது மட்டுமே பொழுதுபோக்கு என இருப்பவர்கள் என்றால் நிச்சயம் இந்த புகைப்படம் உங்களை ஈர்க்கும். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பேரழிவில் வீட்டில் முடங்கிய மக்களில், பெரும்பாலானோருக்கு நேரத்தை எப்படி கழிப்பது என தெரியவில்லை. சின்ன சின்ன விளையாட்டுகளை விளையாடிய அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் போர் அடித்து, அடுத்த ஒன்றை தேடத் தொடங்கினர். சின்ன சின்னை விளையாட்டுகள், ஆன்லைன் கேம்கள் என என்பது மட்டுமே அவர்களின் பொழுதுபோக்காக மாறியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சிலர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு முழுவதுமாக அடிமையாக பணத்தை இழந்த செய்திகளை எல்லாம் படித்திருப்போம். ஆனால், படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளாக அமையும். புத்தகங்களின் ஒவ்வொரு பக்கங்களை திருப்பும்போது புதிய அனுபவமும், எதிர்பார்ப்பும் ஏற்படுவதால், அதனை கீழே வைக்கக்கூட மனமில்லாமல், ஒரே சிட்டிங்கில் புத்தக்கத்தை படித்து முடிப்பவர்களும் இருக்கிறார்கள். லாக்டவுனில் புதிய வாசிப்பாளர்களும், புத்தகப் பிரியர்களும் உருவாகியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆன்லைன் கேம்கள் மூளைக்கும், மனதுக்கு தேவையற்ற பதற்றத்தை கொடுப்பது மட்டுமில்லாமல், பணத்தை செலவழிக்கவும் வைக்கிறது.

  https://twitter.com/AwaisKhanAuthor/status/1403727177938575361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1403803908695277574%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fd-2632594602902774769.ampproject.net%2F2106030132000%2Fframe.html

  ஏற்கனவே வீட்டில் இருப்பவர்களுக்கு இது பொருளாதார நெருக்கடியாகவும் மாறியது. இந்நிலையில், தன் வீட்டில் இருக்கும் நூலகத்தை புகைப்படம் எடுத்த நெட்டிசன் அவைஸ் கான், அதனை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். லாக்டவுன் காலங்களில் இந்த இடத்திலேயே தன்னுடையை முழு நேரத்தையும் செலவிடுவதாகவும் கூறியுள்ளார். அண்மையில், நூலகத்தில் இருக்கும் புத்தகத்தை முழுமையாக எண்ணி முடிந்திருப்பதாக கூறிய அவர், சுமார் 4 ஆயிரம் புத்தகங்கள் தற்போது தன்னிடம் இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

  https://twitter.com/AwaisKhanAuthor/status/1403727177938575361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1403803908695277574%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fd-2632594602902774769.ampproject.net%2F2106030132000%2Fframe.html

  இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், 12 மணி நேரத்துக்குப் பதிலாக 24 மணி நேரமும் அங்கு இருப்பதாக கூறியுள்ள அவர், இங்கிருக்கும் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டேன் என எண்ணிவிடாதீர்கள் என்றும் கூறியுள்ளார். தனக்கு புத்தகங்கள் சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும், அதனடிப்படையில் புத்தகங்களை சேகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். அந்த இடத்துக்கு சென்றால் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இயல்பாக எழுவதாகவும் அவைஸ்கான் தெரிவித்துள்ளார்.

  அவருடைய பதிவுக்கு பதில் அளித்துள்ள மற்ற நெட்டிசன்கள், தங்களது வீட்டில் இருக்கும் நூலகங்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர். அவைஸ்கான் போலவே மற்றொரு நெட்டிசனும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்து அலமாரியில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறியுள்ளார். இன்னும் சில நெட்டிசன்கள் புத்தக அலமாரியை பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். புத்தகங்களை சேகரிப்பது நல்ல விஷயம் என தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அதனை உபயோமாக பயன்படுத்துங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவைஸ் கான் வைத்திருக்கும் புத்தங்களில் சுமார் 2 ஆயிரம் புத்தகங்களையாவது படித்திருந்தால் அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்திருப்பார் என எண்ணிப் பாருங்கள் என நெட்டிசன் ஒருவர் வியந்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: