பிரபலமான குழந்தைகளுக்கான கார்ட்டூன் நிகழ்ச்சியான பெப்பா பிக், அதன் ஏறக்குறைய இரண்டு தசாப்த கால வரலாற்றில் முதல் முறையாக அதன் சமீபத்திய அத்தியாயங்களில் ஒன்றில் ஒரே பாலின ஜோடியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளால் விரும்பப்படும் பெப்பா பன்றி எனும் கார்ட்டூன் நிகழ்ச்சி, உலகின் மிகவும் அடையாளம் காணக்கூடிய பிரபலமான கார்ட்டூன் விலங்குகளில் ஒன்றாகும்.
பெப்பா பிக் உருவாக்கப்பட்ட இங்கிலாந்தின் சேனல் 5 இல் செவ்வாயன்று முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட குடும்பங்கள் என்ற தலைப்பில் ஒரு அத்தியாயத்தின் போது, பென்னி போலார் பியர் என்று பெயரிடப்பட்ட பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பென்னி தனது குடும்பத்தின் உருவப்படத்தை வரைந்தபோது, "நான் என் மம்மி மற்றும் என் மற்றொரு மம்மியுடன் வசிக்கிறேன். ஒரு மம்மி ஒரு மருத்துவர் மற்றும் ஒரு மம்மி ஸ்பாகெட்டி சமைக்கிறார்" என்று கூறப்படுகிறது
வினோத உணவுகளின் ரசிகரா நீங்கள்.. உங்களுக்காகவே ஜப்பானில் பச்சை தவளை கறி காத்துகொண்டு இருக்கிறது,,!
பிரிட்டிஷ் அனிமேட்டர்களான மார்க் பேக்கர் மற்றும் நெவில் ஆஸ்ட்லி ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அதன் 18 ஆண்டுகால வரலாற்றில் ஒரே பாலின ஜோடி ஒன்று இடம்பெறுவது இதுவே முதல் முறை.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு இணையதளத்தில், "பெப்பா பன்றியில் ஒரே பாலின பெற்றோர் குடும்பம்" வேண்டும் என்று கிட்டத்தட்ட 24,000 கையொப்பங்களை ஏந்திய ஒரு மனு கோரப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிகழ்ச்சி வெளியாகியுள்ளது.
"பெப்பா பன்றி நிகழ்ச்சி அனைத்து குழந்தைகளும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. அதிலிருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். இரு வேறு பாலின பெற்றோர்களைக் கொண்ட குடும்பங்கள் மட்டுமே இயல்பானவை என்பதைத் தாண்டி ஒரே பாலினப் பெற்றோர்களும் இயல்பானவை என்பதை அவர்களுக்குக் கற்பிக்க உதவும் சமூக சூழலை அவர்கள் அந்த வயதில் இருந்தே புரிந்துகொள்ள உதவும் என்று அந்த கோரிக்கையில் எழுதப்பட்டிருந்தது.
LGBT+ உரிமைகள் தொண்டு நிறுவனமான ஸ்டோன்வால்ல் தகவல் தொடர்பு மற்றும் வெளிவிவகார இயக்குனர் ராபி டி சாண்டோஸ், கற்பனையான பெப்பா பிக்கில் ஒரே பாலினக் குடும்பத்தைப் பார்ப்பது "அற்புதம்" என்று விவரித்தார்.
வாழ்க்கைப் பாடங்கள் சொல்லும் கார்ட்டூன் கேரக்டர்கள்
பெப்பா பிக் ஒரே பாலின ஜோடிகளைக் கொண்ட குழந்தைகளுக்கான முதல் நிகழ்ச்சி அல்ல. இந்த நிகழ்ச்சியில் இப்போது தான் ஒரே பாலின கதாபாத்திரங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நான்கு முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான கார்ட்டூன் ஆர்தர், 2019 ஆம் ஆண்டில் அதன் 22வது தொடரின் போது ஓரின சேர்க்கையாளர் திருமணத்தைக் காட்டி பாராட்டுகளைப் பெற்றது.
எல்ஜிபிடி உறவுகளைத் தொட்ட பிற பிரபலமான கார்ட்டூன்களில் அட்வென்ச்சர் டைம் மற்றும் ஸ்டீவன் யுனிவர்ஸ் ஆகியவை அடங்கும். இரண்டும் அமெரிக்காவைச் சேர்ந்தவை ஆனால் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டவை.
பெப்பா பன்றியின் சமீபத்திய எபிசோடைத் தொடர்ந்து, பென்னி போலார் பியர் குடும்பத்தின் அறிமுகம் குறித்த விவாதத்துடன் ட்விட்டர் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. அதை ஆதரித்தும் விமர்சித்தும் காரசாரமான விவாதங்கள் இணையத்தில் வலம் வந்துகொண்டு இருக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Children tv icon, TV show