இந்தாண்டு களையிழந்ததா கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ? ஆறுதல் கூறிய நெட்டிசன்கள்

மாதிரிப் படம்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை பற்றி சிலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

  • Share this:
கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஒரு பண்டிகையாகும். சாண்டா கிளாஸ், ஜிங்கிள் பெல்ஸ், கிறிஸ்மஸ் கரோல்கள், கிறிஸ்துமஸ் அலங்காரங்கள், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரிகள், குடும்பத்துடன் சேர்ந்து இரவு உணவு மற்றும் பிரார்த்தனைகள் ஆகியவை இந்த சிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகையில் அனைவருக்கும் கிடைக்கும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஒரு வழியாக முடிந்துவிட்டது.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்த 2020ம் ஆண்டிற்கு மத்தியில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் ஊரடங்கை எதிர்கொண்டதை அடுத்து பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் குறைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி-மார்ச் மாதங்கள் தொடங்கி, மக்கள் பல மாதங்களாக ஊரடங்கில் இருந்தார்கள். தொடர் ஊரடங்கு காரணமாக பல இடங்களில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

சிலர் வீட்டிலேயே உணவினை சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டும், ஆன்லைன் தளங்களில் திரைப்படங்களைப் பார்த்தும் குறிப்பாக நெட்பிளிக்ஸ் அக்கவுண்டில் திரைப்படங்களை பார்த்து தங்கள் நாட்களை கழித்து வந்தனர். ஃபைசர் தடுப்பூசி இப்போதுதான் சில நாடுகளுக்கு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. உலகம் முன்பு இருந்ததை போல் மாறுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகக்கூடும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கலையிழந்தும் கொண்டாட்டங்கள் இன்றியும் காணப்பட்டது.

அந்தவகையில் இந்தாண்டு உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 வருகிற 2021ம் ஆண்டு இந்த ஆண்டைப் போல இல்லாமல் அனைவருக்கும் நல்ல உடல் நலனையும், பலத்தையும், மகிழ்வான வாழ்க்கையை தந்து அனைவரும் அவர்களது பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாட உத்வேகம் அளிக்கும் என்று நம்பிக்கையுடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸை நிறைவு செய்வோம் என்று பலரும் இணையத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் தெரிவித்துக்கொண்டனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: