ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

1.5 லட்சம் மதிப்புள்ள சீன ஜாடி 74 கோடிக்கு விற்பனை - அரிதான பொக்கிஷமாக ஏலத்தில் ஏமாந்த கதை!

1.5 லட்சம் மதிப்புள்ள சீன ஜாடி 74 கோடிக்கு விற்பனை - அரிதான பொக்கிஷமாக ஏலத்தில் ஏமாந்த கதை!

74 கோடிக்கு விற்பனையான ஜாடி

74 கோடிக்கு விற்பனையான ஜாடி

ஏலங்களில் விலை உயர்ந்த, அரிதான பொக்கிஷங்கள் கிடைக்கும். பாரிஸில் மிகவும் அரிதான கலைப்பொருள் என்று ஒரு சீன ஜாடி பல கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பண்டைய கால கலைப்பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. நாணயங்கள் முதல் அரிதான பொக்கிஷங்கள் வரை, எவ்வளவு விலை கொடுத்தாவது இதை வாங்க வேண்டும் என்று பலரும் முயற்சி செய்வார்கள். ஏலங்களில் விலை உயர்ந்த, அரிதான பொக்கிஷங்கள் கிடைக்கும். பாரிஸில் மிகவும் அரிதான கலைப்பொருள் என்று ஒரு சீன ஜாடி பல கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளது.

  அலங்காரமான வேலைப்பாடு உள்ள ஜாடியின் விலை எவ்வளவு இருக்க முடியும்? சில ஆயிரம் முதல் ஓரிரு லட்சம் வரை! பாரீஸ் நகரில் உள்ள ஃபவுண்டைன்ப்ளூ என்ற இடத்தில் உள்ள ஒசெனாட் ஏல வீட்டில் நடைபெற்ற ஏலம் பற்றிய விவரங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று கேட்டால், சாதாரண ஒரு ஜாடி கோடிக்கணக்கில் விற்பனையாகி உள்ளது. இதனுடைய அசல் விலைக்கும் இது விற்கப்பட்ட விலைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை குறிக்கிறது.

  அக்டோபர் 1 அன்று, ஏலத்திற்கு கொண்டவரப்பட்ட, அரிய வகை நீலம் மற்றும் வெள்ளை நிற டியான்கியூபிங் ஜாடியின் அசல் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் 1.2 லட்சம் முதல் 1.6 லட்சம் வரை தான். ஆனால், ஏலத்தில் இந்த ஜாடி 74 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. CNN வெளியிட்ட செய்தியின் படி, ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட இறுதி விலை €9.121 மில்லியன் ஆகும்.

  ReadMore : தென்னாப்பிரிக்க பெண்ணின் வினோத முயற்சி.. ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை.!

  ஏலத்தில் இந்த ஜாடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தபோது இதை பற்றிய விவரங்கள் இது மிகவும் அரிதான பொக்கிஷம் என்று நினைக்கும்படி இருந்தது. டியான்கியூபிங் ஜாடி வட்ட வடிவில், நீல சிலிண்டர் வடிவ கழுத்து கொண்டு இருந்தது. இதில் டிராகன்கள் மற்றும் மேகங்களால் போன்ற வடிவங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல் எல்லா டியான்கியூபிங் ஜாடிகளுமே ஸ்பியர் வடிவத்தில்தான் இருக்கும்.

  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, ஏல இல்லத்தின் பிரெசிடென்ட் ஆன ஜீன்-பியர், ஏலத்தில் விற்பனையான ஜாடியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிப்பதாகவும், இறந்த அவரது பாட்டி வீடு ஃபிரான்சில் உள்ளதாகவும், அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை ஏலத்தில் விடக் கோரியும் கூறியிருந்தார் என்று தெரிவித்தார்.

  பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஜாடியாக நினைத்து இதற்கு கோடிக்கணக்கில் மதிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஜாடி இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததுதான், இது அரிதான பொருள் அல்ல என்பதை மதிப்பீட்டாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இவ்வளவு பெரிய தொகை அதன் உரிமையாளரின் வாழ்க்கையே மாற்றும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

  இவ்வளவு விலை கொடுத்து ஒரு சாதாரண ஜாடியை வாங்கியவர் சீனாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வாங்கியவர் யார் என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சீனர்கள் இதேபோன்ற பொக்கிஷம், அரிதான கலைப்பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக தங்கள் நாட்டிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காலத்தில் திருடு போன பொருட்களை மீட்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral