நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுவோம், சில உணவுகளை சாப்பிட மாட்டோம். இந்த பழக்கம் குழந்தை பருவத்தில் இருந்தே நம்மிடம் இருக்கும். உதாரணமாக பிக்கி ஈட்டர்ஸ் என்று குழந்தைகளை கூறுவார்கள். இளம் வயதில் நான்கைந்து உணவு வகைகளை மட்டும் தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதைத் தவிர வேறு எந்த உணவை கொடுத்தாலும் சாப்பிடவே மாட்டார்கள்.
இந்த பழக்கம் சிலருக்கு பெரியவராக ஆன பின்பும் தொடருகிறது. சுவை காரணமாகவோ அல்லது பழக்கமில்லாத காரணமாகவும் சில உணவுகளை ஒரு சிலர் சாப்பிட மாட்டார்கள். இதே போல தேர்ந்தெடுத்து சாப்பிடும் பழக்கம் அல்லது தேர்ந்தெடுத்து உணவுகளை தவிர்க்கும் பழக்கம் மனிதர்களிடம் மட்டும் கிடையாது. பறவைகளிடம் இருக்கிறது என்று சமீபத்தில் வெளியான ஒரு செய்தி உறுதி செய்துள்ளது.
பணவீக்கம் இந்தியாவை மட்டும் தாக்கவில்லை, உலகின் பல நாடுகளை பாதித்துள்ளது. அதில் ஜப்பானும் ஒன்று. அதன் விளைவாக, ஜப்பானில் உள்ள ஒரு அக்வாரியம் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசியால் சரிவர பராமரிப்பு பணியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஜப்பானில் கனகவா என்ற ஒரு இடத்தில் இருக்கும் ஒரு அக்வாரியத்தின் அதிகாரிகள் பென்குயின்கள் முன்பு போல இல்லை, தாங்கள் சாப்பிடும் உணவை ஆய்வு செய்துதான் தேர்ந்தெடுக்கின்றன. அது மட்டும் இல்லாமல் இப்பொழுது அவைகளுக்கு தற்போது வழங்கப்படும் விலை மலிவான மீன்களை அவை சாப்பிடுவதே இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அக்வாரியத்தின் தலைவரான ஹிரோக்கி ஷிமமோட்டோ இதைப் பற்றி கூறுகையில் “பென்குயின்களுக்கு மீன்கள் உணவளிக்கும் பொழுது அவை அதனை லேசாக சுவைத்துப் பார்க்கிறது. அதன் சுவை பிடிக்காததால் உடனடியாக துப்பிவிடுகிறது.எனவே இதன் மூலம் தங்களுக்கு வேறு உணவு வழங்கப்படுகிறது என்பதை அவை அறிந்து கொண்டுள்ளன” என்று கூறினார். இதற்கு முன்பு எங்களுக்கு விலை அதிகமான ஹார்ஸ் மேகரல் என்ற மீன் வகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது விலைவாசி உயர்வால் அந்த மீன் வகை வாங்க முடியாத சூழலால் மலிவு விலையுள்ள ஒரு மேகரல் மீன்களை தான் வாங்குகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Facing soaring inflation, a Japanese zoo has resorted to offering cheaper fish to its sea animals. The penguins are very unimpressed, refusing to even look at them. The otters are throwing the offerings aside. pic.twitter.com/mUtKGNh3Mz
ஹார்ஸ் மேகரல் என்ற மீன் வகை தொடர்ந்து விலை அதிகரித்து வருவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக பணவீக்கம் மற்றும் இரண்டாவதாக இந்த மீன் வகை அதிகமாக பிடிபடுவதில்லை. விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக இந்த அக்வாரியம் முதலில் மலிவு விலை மீனுடன் அனிமல் மீல்ஸ் என்று கூறப்படும் சப்ளிமென்டையும் சேர்த்து வழங்கி வந்தன.
ஆனால் தற்போது இந்த மலிவு விலை மீன்கள் தான் இவர்களின் பிரதான உணவாக தினமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பெங்குவின்கள் இந்த புதிய மீனை உண்ண மறுத்து வந்தால் அவைகளுக்கு மட்டும் இதற்கு முன்பு வழங்கப்பட்ட உணவுகள் வழங்கப்படும் என்றும் அக்வாரியம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.