திமிங்கலத்தின் தாடைகளில் இருந்து தப்பித்து கப்பலில் குதித்த பென்குயின் - வைரலாகும் வீடியோ!

திமிங்கலத்தின் தாடைகளில் இருந்து தப்பித்து கப்பலில் குதித்த பென்குயின் - வைரலாகும் வீடியோ!

வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்.

பென்குயின் டிங்கி கப்பலை நெருங்கியபோது, உடனடியாக கப்பலில் தாவி குதித்துள்ளது. இறுதியில் சுற்றுலாப் பயணிகளால் உதவி பென்குயினை பாதுகாத்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தன்னை கொல்ல வந்த திமிங்கலங்களின் தாடைகளில் இருந்து தப்பித்து பயணிகள் படகில் குதித்த பென்குயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  அண்டார்டிகாவிற்கு அருகிலுள்ள கெர்லாச் ஜலசந்தியில் டிங்கி என்ற கப்பலில் பயணித்தவர்களால் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது. கொலையாளி திமிங்கலங்கள் துரத்தியதால் அவர்கள் தங்கள் கப்பலின் அருகே பென்குயின் வேகத்தைக் கண்டனர்.

  திமிங்கலத்தின் தாடைகளில் இருந்து தப்பிக்க பென்குயின் போராடியதால் கப்பலில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பெங்குயினின் வேகத்தை அருகில் இருந்து பார்த்தனர், ஆனால் பார்வையாளர்கள் பென்குயின் விளையாடுகிறது, என்று நினைத்ததைப் போலவே, அது கப்பலை நோக்கி அவ்வப்போது ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது, இதை நேரில் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது. நேரில் இருந்து பார்த்த போது தேசிய விலங்கு தொலைக்காட்சியில் வேடிக்கை பார்ப்பது போல் இருந்தது என வீடியோவில் தெரிவித்திருந்தனர்.

  மெக்ஸிகோவை சேர்ந்த பயண எழுத்தாளர் கார்ஸ்டன், கப்பலில் நடந்த இந்த காட்சிகளை, "பென்குயின் தப்பித்து மிகவும் நிம்மதியாக இருந்தது என்று நான் கற்பனை செய்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

  அவர் இந்த வீடியோவை பதிவு செய்தபோது அவருடன் மனைவி இருந்துள்ளார். கார்ஸ்டன் படம் எடுக்கத் தொடங்கிய போது திமிங்கலங்கள் பனிப்பாறைகளுக்கு இடையே உள்ள தண்ணீரில் விளையாடுவதை கவனித்துள்ளனர். அவைகள் கேமரா வரை நீந்தி ஹலோ சொல்வது போல நெருங்கி வந்தார் என கார்ஸ்டன் கூறினார்.

  ஆரம்பத்தில் அவர்கள் திமிங்கலங்கள் நீச்சல் அடிக்கின்றனர் என்று நினைத்தார்கள், ஆனால் பென்குயினை துரத்தி சென்றதை விரைவில் கவனித்தனர். அதற்கு முன்னர் பென்குயின் வேகமாக அதன் பாதையில் சென்றது, இறுதியில் அந்த பென்குயின் அருகிலுள்ள படகில் ஏற முயன்றது என்று கரேஸ்தான் தெரிவித்துள்ளார்.

  Also read... ரஷ்ய விமானத்தில் பயணிக்கும் போது உள்ளாடையை கழட்ட முயன்ற பெண்... இருக்கையுடன் கட்டிவைத்த விமான ஊழியர்கள்!

  பென்குயின் டிங்கி கப்பலை நெருங்கியபோது, உடனடியாக கப்பலில் தாவி குதித்துள்ளது. இறுதியில் சுற்றுலாப் பயணிகளால் உதவி பென்குயினை பாதுகாத்தனர். பென்குயின் தனது இரண்டாவது முயற்சியில் மட்டுமே படகில் ஏறியது. சிறிது நேரம் பயணம் செய்தபின், திமிங்கலங்கள் வேறு திசையில் சென்ற நிலையில் பென்குயின் படகில் இருந்து விடைபெற்று மீண்டும் பனிக்கட்டி நீரில் மூழ்கி மறைந்தது என்று கரேஸ்தான் மேற்கோளிட்டுள்ளார்.

  இதுவரை இதுபோன்ற சம்பவங்களை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்துள்ள நிலையில், திமிங்கலத்தின் வாயில் சிக்கிய பென்குயின் தப்பித்த காட்சிகளை நேரில் பார்த்தது திகைப்பூட்டும் வகையில் இருந்ததாக கப்பலில் பயணம் செய்த பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த சுவாரஸ்யமான வீடியோ ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் பென்குயினின் சாதூர்ய திறமையை பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: