கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு மருத்துவருடன் செம ஆட்டம் போட்ட பெங்களூரு நபர்.., வைரல் வீடியோ!

மருத்துவருடன் செம ஆட்டம் போட்ட பெங்களூரு நபர்

மருத்துவர் மற்றும் கொரோனா வைரஸை வென்ற ஒரு நோயாளியின் நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா வைரஸ் ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் தற்போது கொரோனாவின் கொடிய இரண்டாம் அலை நாடு முழுவதையும் தாக்கி வரும் இதுபோன்ற மோசமான காலத்தில், மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் உரிய மருந்துகளைப் பெறுவதில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை பார்க்கும்போது இருள் மற்றும் உதவியற்ற தன்மை எல்லா இடங்களிலும் உள்ளது என்பது தெளிவாகிறது.

வைரஸின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் பல குடும்பங்களின் இயல்பு நிலையை சிதைத்துள்ளது. மேலும் பேரழிவிற்கு தள்ளியுள்ளது. நாடு பெருமளவில் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் கையாளும் அதே வேளையில், மருத்துவமனைகளில் இருந்து குணமடைந்து வெளியேறுபவர்களின் மகிழ்ச்சியான வீடியோக்கள் அவ்வப்போது மக்களின் முகத்தில் புன்னகையைத் தருகிறது.

அந்த வகையில் சமீபத்தில், ஒரு மருத்துவர் மற்றும் கொரோனா வைரஸை வென்ற ஒரு நோயாளியின் நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈஆர்டி பெங்களூரு பகிர்ந்த அந்த சந்தோஷமான வீடியோ கிளிப்பில், பிபிஇ கிட்டில் அணிந்திருக்கும் மருத்துவர் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவமனையின் பொது வார்டில் ஒரு நோயாளியுடன் நடனமாடுவதைக் காணலாம். அவர்கள் இருவரும் பாலிவுட் டிராக்கின் இசைக்கு ஏற்றாற்போல அசைவுகள் செய்வதைக் காணலாம்.அந்த வீடியோவில் காண்பிக்கப்பட்ட நோயாளியின் பெயர் குமார் ஆகும். அந்த நபர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மிகச்சமீபத்தில் எடுத்துக்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து நோய்த்தொற்றின் தீவிரத்தை அறிய, அவருக்கு சி.டி ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் சி.டி ஸ்கேன் மதிப்பெண் 25க்கு 18 என்று இருந்தது. மேலும் அவரது ஆக்ஸிஜன் செறிவு 75 ஆக இருந்தது. அவரது நிலையின் தீவிரம் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டார்.

Also read... மருத்துவமனை முன் பிச்சை எடுத்த சிறுவன் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் - உடனடியாக உதவிய அமைச்சர்!

ஆனால், படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக ஏதேனும் ஒரு மருத்துவமனையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் மைசூருக்கு சென்றுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அவரால் அங்கே எந்த படுக்கையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து, பெங்களுருவில் ஏதேனும் ஒரு படுக்கையை கண்டுபிடிக்க ஈஆர்டி குழுவை அவர் அணுகியுள்ளார். அந்த குழு அவருக்கு மருத்துவமனையை தேடிக் கண்டுபிடித்து கொடுத்துள்ளது.

படுக்கையை கண்டுபிடிப்பதற்கு ஈஆர்டி அமைப்பு அவருக்கு உதவியதால், ஏழு நாட்களுக்குப் பிறகு அவர் எப்படி இருக்கிறார் என்பதை அறிய அந்த குழு அவரைச் சோதித்தனர். அதன்பிறகு தான் தனது நல்வாழ்வை விவரிக்க குமார் இந்த மகிழ்ச்சியான நடன வீடியோவை குழுவுக்கு அனுப்பியுள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னதாக மருத்துவருடன் சந்தோஷத்தில் நடனமாடி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

மே 25 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர், குமார் தனது வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மேலும் தற்போது தனிமையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குமாரின் வீடியோவை பார்க்கும் போது அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சியும், ஒரு உத்வேகமும் ஏற்படுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: