சாக்லேட்டால் செய்யப்பட்ட சுதந்திர தேவி சிலை – அசந்து போன நெட்டிசன்கள்!

சாக்லேட்டால் செய்யப்பட்ட சுதந்திர தேவி சிலை

அமரி குய்சன், பல்வேறு விதமான சாக்லேட்கள் பயன்படுத்தி ஏழு அடி நீளமுள்ள சுதந்திர தேவி சிலையை உருவாக்கியுள்ளார்

  • Share this:
சமீபமாக ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம், 7 அடி நீளமுள்ள சாக்லேட் சுதந்திர தேவி சிலை மற்றும் அதை உருவாக்கிய அமரி குய்சனைக் காட்டுகிறது.

நீங்கள் இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்துபவரா? அப்படி என்றால், உங்களுக்கு அமரி குய்சன் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மிகவும் பிரபலமான பேஸ்ட்ரி செஃப் ஆன குய்சன், தன்னுடைய அற்புதமான தயாரிப்பு ஒன்றை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். இந்த தயாரிப்பு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வாயடைக்கச் செய்யும். வாவ் என்று உங்களை அறியாமல் பல முறைக் கூறிக் கொண்டே இருப்பீர்கள்.

அவர் அப்படி என்ன தான் தயாரித்தார்?

அமரி குய்சன், பல்வேறு விதமான சாக்லேட்கள் பயன்படுத்தி ஏழு அடி நீளமுள்ள சுதந்திர தேவி சிலையை உருவாக்கியுள்ளார். இந்த சாக்லேட் சிலை, மிகவும் நேர்த்தியாக. உண்மையான சுதந்திர தேவி சிலையின் மினியேச்சரைக் கண் முன்னே நிறுத்துகிறது. அவ்வளவு நேர்த்தியாக, சாக்லேட்கள் கொண்டு சிலையை வடிவைமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  டீ -கடையில் தட்டு கழுவும் குரங்கு...என்ன ஒரு கொடுமை இரக்கமே இல்லையா?கொந்தளிக்கும் இணையவாசிகள் - வைரலாகும் வீடியோ

குய்சன் இந்த சாக்லேட் சிலையின் செய்முறையையும் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ, அவர் சிலையின் அடிப்பகுதியை எப்படி உருவாக்கினார் என்பதிலிருந்து தொடங்குகிறது. ஒவ்வொரு பகுதியையும் எவ்வளவு கச்சிதமாக, துல்லியமாக செதுக்கி, வடிமைத்த விவரங்கள் வீடியோவில் உள்ளன.

நீங்கள் இந்த வீடியோவைப் பார்ப்பது வரை கொஞ்சம் அமைதியாக இருக்கவும். பார்த்த பின்னே நீங்கள் அசந்து விடுவீர்கள்!

 

  
View this post on Instagram

 

A post shared by Amaury Guichon (@amauryguichon)


 

ஜூலை 5 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோவை இது வரை 4.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். கச்சிதமான வடிவமைப்புகளைப் கண்டு அசந்த நெட்டிசன்கள், பின்னூட்டங்களை வாரி வழங்கியுள்ளனர்.மக்கள், ஸ்டேட்டன் தீவிலிருந்து ஒரு ஃபெர்ரியை புக் செய்து கொண்டு, குய்சனின் இந்த சாக்லேட் சுதந்திர தேவி சிலையை காண வரவேண்டும் என்று உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ |  என்னென்ன செய்றான் பாருங்க.... நடனம் ஆடி ரசிகர்களை சேர்க்கும் நாய்... - வைரல் வீடியோ

பலரும், தங்கள் பாராட்டை எமொஜிக்கள் பகிர்வது மூலம், ஹார்ட் எமோஜிக்களை வழங்குவது மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

“எவ்வளவு நேர்த்தியான சாக்லேட் சிலை! நம்பவே முடியவில்லை’ என்று ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு இன்ஸ்டாகிராம் யூசர்.

“நான் ஒரு ஃபெர்ரியை எடுத்துக்கொண்டு, ஸ்டேடன் தீவுக்கு இதைப் பார்ப்பதற்கு வரலாமா’ என்று ஒரு இன்ஸ்டாகிராம் யூசர் தெரிவித்துள்ளார்.

  
View this post on Instagram

 

A post shared by Amaury Guichon (@amauryguichon)


 

சாக்லேட்டில் இப்படியா... நம்பவே முடியவில்லை!” என்று மற்றொரு இன்ஸ்டாகிராம் யூசர் பின்னூட்டம் அளித்துள்ளார்.

“அற்புதம், இதற்கு நிகரே இல்லை” என்று கூறியுள்ளார் இன்னொரு யூசர்.

“நீங்கள் அற்புதமான கலைஞர்! இது உணவு மட்டுமல்ல..’ என்று மற்றொரு யூசர் தன் பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 இந்த வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

 
Published by:Sankaravadivoo G
First published: